இந்தியா

“ராஜீவும் பெரும்பான்மையுடன்தான் ஆட்சிக்கு வந்தார்; இதுபோல நாட்டை நாசம் செய்யவில்லை” : சோனியா தாக்கு!

“1984-ல் ராஜீவ் காந்தி அறுதிப் பெரும்பான்மையுடன்தான் ஆட்சியமைத்தார்; ஆனால் மக்களிடையே அச்சத்தைப் பரப்ப அவர் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை” என பா.ஜ.க-வை கடுமையாகச் சாடியுள்ளார் சோனியா.

“ராஜீவும் பெரும்பான்மையுடன்தான் ஆட்சிக்கு வந்தார்; இதுபோல நாட்டை நாசம் செய்யவில்லை” : சோனியா  தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“1984-ல் ராஜீவ் காந்தி அறுதிப் பெரும்பான்மையுடன்தான் ஆட்சியமைத்தார்; ஆனால் மக்களிடையே அச்சத்தைப் பரப்ப அவர் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை” என பா.ஜ.க-வை கடுமையாகச் சாடியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்ததினத்தை முன்னிட்டு டெல்லி கே.டி.ஜாதவ் மைதானத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய காங். தலைவர் சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்துடன் மோடி அரசை ஒப்பிட்டுக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அவர் பேசுகையில், “1984 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்தார். ஆனால், அவர் ஒருபோதும் அச்சமான சூழ்நிலையை உருவாக்கவோ அல்லது மக்களின் சுதந்திரத்தை அழிக்கவோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

ராஜீவ் செய்ததை இன்று செய்வது கடினம். அரசு இயந்திரங்களை, மத்திய அரசு பழிவாங்குவதற்காகப் பயன்படுத்துகிறது. ராஜீவ் நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்துகொண்டு, எந்த பாரபட்சமான முடிவையும் எடுக்கவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதன் மூலம் ஒற்றுமையை நிலைநிறுத்த முடியும் என்ற செய்தியை ராஜீவ் காந்தி வழங்கினார்.

ராஜீவ் காந்தி புதிய எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். ஆனால், இன்று கடந்தகாலங்களைப் பற்றிப் புதிதாகக் கண்டுபிடிப்பதில் சிலர் மும்முரமாக உள்ளனர். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது செய்ததை யாராலும் செய்ய முடியாது.” எனத் தெரிவித்தார்.

“ராஜீவும் பெரும்பான்மையுடன்தான் ஆட்சிக்கு வந்தார்; இதுபோல நாட்டை நாசம் செய்யவில்லை” : சோனியா  தாக்கு!

மேலும், “மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் மற்றும் இந்தியாவின் கொள்கையை மாற்ற விரும்புவோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொள்கைப் பிடிப்புடன் தொடர்ந்து போராடும்” எனவும் சோனியா காந்தி உறுதியளித்தார்.

banner

Related Stories

Related Stories