தமிழ்நாடு

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்: சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டதா?

விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவிருக்கும் தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்:  சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்திற்குள் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும் அவர்கள் கோயம்புத்தூரில் குடியேறியிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இவர்கள் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டி.ஜி.பி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்:  சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டதா?

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோரப் பகுதிகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளன.

அதுமட்டுமின்றி, ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்களில் தீவிர சோதனையில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சற்றுமுன்பு, தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவலை கோவை காவல் ஆணையர் மறுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories