இந்தியா

நிலவை நெருங்கிய சந்திரயான் 2 : சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு!

நிலவை நெருங்குவதற்காக சுற்றுவட்டப்பாதையை மாற்றியது சந்திரயான் 2.

நிலவை நெருங்கிய சந்திரயான் 2 : சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

சுமார் 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான் 2 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுவந்த நிலையில், வெற்றிகரமாக நேற்று நிலவின் வட்டப்பாதையை சென்றடைந்தது.

இதனையடுத்து பகல் 12.50 மணிக்கு சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது. இதற்காக விண்கலம் 1228 நொடிகள் எடுத்துக்கொண்டது.

கடிகார திசையில் நிலவைச் சுற்றி வரும் சந்திரயான் 2, நிலவுக்கு அருகே சென்று அதன் வேகத்தைக் குறைக்க முடியும். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நிலவை நெருங்கி அதன் தென் துருவப் பகுதியில் சந்திரயான் 2 வெற்றிகரமாக இறங்க முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து செப்டம்பர் 7ம் தேதி முழுமையாக சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கி விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories