இந்தியா

“ரக்‌ஷாபந்தனில் எங்கள் சகோதரிகளுக்காக...” : ஆற்றுக்கு குறுக்கே மனித சங்கிலி அமைத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்!

சத்தீஸ்கரில் வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தை பொதுமக்கள் பாதுகாப்பாக கடப்பதற்கு வசதியாக, CRPF வீரர்கள் மனிதச் சங்கிலி அமைத்து உதவினர்.

 “ரக்‌ஷாபந்தனில் எங்கள் சகோதரிகளுக்காக...” : ஆற்றுக்கு குறுக்கே மனித சங்கிலி அமைத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சத்தீஸ்கரில் வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தை பொதுமக்கள் பாதுகாப்பாக கடப்பதற்கு வசதியாக, சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் மனிதச் சங்கிலி அமைத்து உதவினர்.

கடந்த சில நாட்களாக சத்தீஸ்கர் மாநிலத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனா;, சத்தீஸ்கர் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சுக்மா மாவட்டம், காதிராஸ் பகுதியின் மால்கர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் குறுக்கே அமைந்திருந்த பாலம் மூழ்கியது.

இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தில் முழங்கால் அளவு தண்ணீரில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் மனிதச் சங்கிலி அமைத்து நின்று அப்பகுதியினர் பாலத்தைக் கடக்க உதவிபுரிந்தனர். இந்தச் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 “ரக்‌ஷாபந்தனில் எங்கள் சகோதரிகளுக்காக...” : ஆற்றுக்கு குறுக்கே மனித சங்கிலி அமைத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்காக பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ரக்‌ஷாபந்தன் அன்று உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் சிரமப்படவே, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மனிதச் சங்கிலி அமைத்து ஆற்றைக் கடக்க வழி செய்துள்ளனர்.

இதுகுறித்து ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரர், “சகோதரிகள் தங்கள் சகோதரர்களைக் காணச் செல்ல ஆற்றைக் கடக்க முடியாமல் பரிதவித்தனர். நாங்கள் அவர்களுக்கு உதவினோம்” என உணர்ச்சிபொங்கத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories