இந்தியா

என்.டி.டி.வி நிறுவனர்கள் வெளிநாடு செல்லத் தடை : ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை!

அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக என்.டி.டி.வி-யின் நிறுவனர்கள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

என்.டி.டி.வி நிறுவனர்கள் வெளிநாடு செல்லத் தடை : ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசு தங்களது ஆட்சியில் அரங்கேறும் பாதகச் செயல்களை அம்பலப்படுத்தும் ஊடகங்களை முடக்கும் வேலையைச் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. பா.ஜ.க ஆட்சியில் நடைபெறும் குளறுபடிகளையும் பொய் பிரச்சாரத்தையும் என்.டி.டிவி செய்தி நிறுவனம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது. தொடக்கத்தில் இருந்தே என்.டி.டி.வி செய்தி நிறுவனத்தை பழிவாங்க நினைத்து பல முயற்சிகளை பா.ஜ.க அரசு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், என்.டி.டி.வி-யின் நிறுவனர்கள் ராதிகா மற்றும் பிரணாய் ராய் இருவரும் தொழில் வளர்ச்சிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டு விமான நிலையம் சென்றுள்ளனர். விமான நிலையத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதனால் இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

என்.டி.டி.வி-யின் நிறுவனர்கள் ராதிகா மற்றும் பிரணாய் ராய் இருவரும் வெளிநாட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். அங்கிருந்து மீண்டும் 15ம் தேதி திரும்பி வருவதற்காக முன்பதிவும் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ கடன் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த முற்றிலும் ஆதாரமற்ற போலி ஊழல் வழக்கை வைத்துக்கொண்டு அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வாங்கிய கடனுக்காக முன்பே வட்டியுடன் முழு தொகையையும் பிரணாய் ராய் திருப்பிச் செலுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு இருவரும் முழு ஒத்துழைப்பை அளித்துவருகிறார்கள். இதற்கு முன்னதாகவும் வெளிநாட்டிற்குச் சென்று வந்துள்ளனர். ஆனால் தற்போது மட்டும் அவர்கள் வெளிநாட்டிற்கு செல்வது ஆபத்தானது எனக் கூறுவது உள்நோக்கத்துடன் செய்யப்படும் சதி எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக என்.டி.டி.வி நிறுவனம் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், “இந்த நடவடிக்கை ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது. அடிப்படை உரிமைகளுக்கு எதிராக என்.டி.டி.வி நிறுவனர்கள் பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது. ஊடக நிறுவனர்களின் மீதான இத்தகைய பழிவாங்கல் நடவடிக்கையை பலரும் கண்டித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories