இந்தியா

“ஒரு குற்றவாளிக்கு அதிகாரம் வழங்கியதை பாஜக ஒப்புக்கொள்கிறது; இனி நீதி வழங்கவேண்டும்”: பிரியங்கா ட்வீட்! 

உன்னாவ் பயங்கர விவகாரத்தில் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து, ஒரு குற்றவாளிக்கு பா.ஜ.க அதிகாரம் வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார் பிரியங்கா காந்தி.

“ஒரு குற்றவாளிக்கு அதிகாரம் வழங்கியதை பாஜக ஒப்புக்கொள்கிறது; இனி நீதி வழங்கவேண்டும்”: பிரியங்கா ட்வீட்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டு தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகாரளித்தார். இதனால் ஆத்திரமடைந்த குல்தீப் சிங் செங்காரின் ஆதரவாளர்கள் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று மிரட்டினர். ஆனாலும் அவர் புகாரை வாபஸ் பெற மறுத்துவிட்டதால் பெண்ணின் தந்தையை காவல்துறை மூலம் கைது செய்து அச்சுறுத்தினர்.

போலீஸ் காவலில் இருந்த பெண்ணின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து எம்.எல்.ஏ. குல்தீப் செங்காரை கைது செய்தது.

இதற்கிடையே கடந்த திங்கட்கிழமையன்று, பாதிக்கப்பட்ட பெண், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் சென்ற கார் மீது லாரி மோதியது. இதில் அந்தப் பெண்ணும், வழக்கறிஞரும் படுகாயம் அடைந்தனர். அந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

“ஒரு குற்றவாளிக்கு அதிகாரம் வழங்கியதை பாஜக ஒப்புக்கொள்கிறது; இனி நீதி வழங்கவேண்டும்”: பிரியங்கா ட்வீட்! 

பலத்த காயத்துடன் உயிர் தப்பிய இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தற்செயல் அல்ல என்றும் திட்டமிட்ட சதி என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இன்று, பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச கிழக்கு மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஒரு குற்றவாளிக்கு பா.ஜ.க-வில் அதிகாரம் வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, “பா.ஜ.க, இறுதியாக ஒரு குற்றவாளிக்கு அதிகாரம் அளித்ததை ஒப்புக்கொள்கிறது. மேலும் சில நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இனி, அளவற்ற துன்பங்களுக்கு ஆளான ஒரு இளம் பெண்ணுக்கான நீதியின் வழியில் செல்லவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories