இந்தியா

MAN vs WILD : ராணுவ வீரர்களைப் பற்றி அக்கறை காட்டாமல் காட்டுக்கு ஷூட்டிங் போன மோடி - இதுதான் தேசபக்தியா?

உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

MAN vs WILD  : ராணுவ வீரர்களைப் பற்றி அக்கறை காட்டாமல் காட்டுக்கு ஷூட்டிங் போன மோடி - இதுதான் தேசபக்தியா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Man vs Wild நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமான நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்ப்பார்கள். இந்நிலையில், பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

மோடி பங்குபெறும் ‘ManvsWild’ நிகழ்ச்சிக்கான ட்ரெய்லரை பியர் க்ரில்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. பிரதமர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

புல்வாமா தாக்குதல் நடைபெற்று 44க்கும் மேற்பட்ட இராணுவ வீர்கள் உயிரிழந்திருந்த நேரம் மோடி கோபார்ட் பார்க்கில் டிஸ்கவரி சேனலின் Man vs Wild நிகழ்ச்சிகான ஷூட்டிங்கில் இருந்தார். சொந்த நாட்டு வீரர்களை பயங்கரவாதிகள் கொன்றுகுவித்த வேளையிலும் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த மோடியை தேசபக்தி மிகுந்தவர் எனக் கூறிக்கொள்கிறீர்களா என காங்கிரஸ் கட்சி அப்போதே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை வெட்டுவதற்கு மோடி தலையிலான பா.ஜ.க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் உள்ள காடுகளை எல்லாம் அழித்துவிட்டு எந்தக் காட்டிற்கு மோடி செல்கிறார் என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories