இந்தியா

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லாததால் இஸ்லாமிய சிறுவன் மீது தீ வைத்த இந்துத்வா கும்பல் : உ.பியில் பயங்கரம்!

17 வயது இஸ்லாமிய சிறுவனை கடத்தி ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிடச் சொல்லி வற்புறுத்திய இந்துத்வா கும்பல்.

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லாததால் இஸ்லாமிய சிறுவன் மீது தீ வைத்த இந்துத்வா கும்பல் : உ.பியில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததில் இருந்து வட மாநிலங்களில் இந்துத்வா கும்பலின் ஆதிக்கம் தலைத்தூக்கியுள்ளது. இஸ்லாமியர்களை கண்டாலே ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி பல்வேறு சட்டம் ஒழுங்கு மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில், ஜார்கண்ட் மாநிலத்தில் பைக் திருட வந்ததாகக் கருதி இஸ்லாமிய இளைஞரை ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி 7 மணி நேரம் கட்டி வைத்து அடித்ததில் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இது, தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை முன்வைத்தனர்.

அதேபோல், கடந்த வாரம் ஜார்கண்ட் சட்டப்பேரவை முன்பு காங்கிரஸ் இஸ்லாமிய எம்.எல்.ஏவை ஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லியும், உங்களது முன்னோர்கள் பாபர் வழியில் வந்தவர்கள் அல்ல, ராமர் வழி வந்தவர்கள் தான் எனவும் பா.ஜ.க. அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் சந்தாலி மாவட்டத்தில் ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி வற்புறுத்தி 17 வயதுடைய இஸ்லாமிய சிறுவனை கடத்தி, அச்சிறுவன் மீது தீ வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்துத்வ கும்பலால் தாக்கப்பட்ட அச்சிறுவன் 60% தீக்காயங்களுடன் வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இது தொடர்பாக பேசிய அச்சிறுவன், தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். அதற்கு மறுத்ததால் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால், போலீசார் தரப்போ அதனை மறுத்து, சிறுவன் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறான் எனவும் சிறுவன் குறிப்பிட்ட மகாராஜ்பூர் மற்றும் ஹாதீஜா ஆகிய இரண்டு இடங்களும் வெவ்வேறு பகுதியில் உள்ளதாகவும், தனக்கு தானே அவன் தீ வைத்துக் கொண்டுள்ளதாகவும், அச்சிறுவனுக்கு 45% தீக்காயங்களே ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க. அரசு முழுக்க முழுக்க, இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிரான செயல்பாடுகளையே தொடர்ந்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் வசிக்கும் சிறுபான்மையினர் நாள்தோறும் அச்சத்துடனேயே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories