இந்தியா

எதிர்ப்புகளை மீறி மக்களவையில் நிறைவேறியது RTI மசோதா!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

எதிர்ப்புகளை மீறி மக்களவையில் நிறைவேறியது RTI மசோதா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தில் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு, தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இதுவரை பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அரசுத் துறைகளின் போதாமையை அம்பலப்படுத்தி வந்த ஆர்டிஐ-யின் அதிகாரத்தைக் குறைப்பதன் மூலமாக குடிமக்களின் தகவலறியும் உரிமையையும் கட்டுப்படுத்த நினைக்கிறது பா.ஜ.க அரசு.

சட்டத் திருத்த வரைவு மசோதா, கடந்த 19ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க எம்.பி., ஆ.ராசா, “மத்திய அரசின் இந்த நடவடிக்கை தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும்” எனப் பேசினார்.

மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும். தகவல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை சீர்குலைக்கும். எனவே இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, மத்திய - மாநில தகவல் ஆணையரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். ஊதியம் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசின் கைகளில் ஒப்படைக்கப்படும்.

banner

Related Stories

Related Stories