இந்தியா

ஜி.எஸ்.டி வரியில் 7,600 கோடி மோசடி: ஒருவர் கூட தப்ப முடியாது என்ற மோடியின் வாக்குறுதி பொய்யான கதை!

ஹரியானா மாநிலத்தில் ஒருவர் போலி நிறுவங்களை உருவாக்கி அதன் மூலம் ரூ.7,600 கோடி வரை ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.

ஜி.எஸ்.டி வரியில் 7,600 கோடி மோசடி:  ஒருவர் கூட தப்ப முடியாது என்ற மோடியின் வாக்குறுதி  பொய்யான கதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சுமார் 90 போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் போலி பில்களை தயாரித்து கொள்முதல் செய்ததாகவும், அதன் மூலம் சுமார் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு மற்றும் வரி மோசடி செய்திருப்பதாகவும் மறைமுக வரிகள் வாரியத்தின் புலனாய்வு கண்காணிப்புக் குழு ( The Directorate General of GST Intelligence-DGGSTI ) கண்டுபிடித்துள்ளது.

உள்ளீட்டு வரிப் பயனை பெறுவதற்காகவே, அந்த நபர் போலி விற்பனை பில்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் சுமார் 110 கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளையும், கையொப்பமிடாத காசோலைகளையும், 173 வங்கிக் கணக்கு ஆவணங்களும் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை வழக்கம் போல ஒரு செய்தியாக கடந்து போகாமல், கடந்த கால ஆட்சியின் போது பாஜக அரசின் பொய்யான வாக்குறுதி நிர்வாக கோளாறு போன்றவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததாக பார்க்கப்படுகிறது என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி வரியில் 7,600 கோடி மோசடி:  ஒருவர் கூட தப்ப முடியாது என்ற மோடியின் வாக்குறுதி  பொய்யான கதை!

மேலும் இது குறித்து பொருளாதார வல்லுநர் ஒருவர் கூறுகையில், “பா.ஜ.க கடந்த கால ஆட்சியின் போது ஏராளமான பொய் வாக்குறுதிகளை கொடுத்து பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற சில மோசமான திட்டங்களை கொண்டுவந்தது. அதில் ஜி.எஸ்.டியால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தகவல் வெளிவந்து, கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜி.எஸ்.டி வரிமுறை அமல்படுத்தப்பட்டது.

எதற்காக இந்த வரைமுறை என கேட்டபோது முன்பு இருந்த வாட் வரி விதிப்பு முறையில் அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனால் அரசுக்கு வருவாய் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மேலும் இதன் மூலம் கருப்புப் பொருளாதாரம் ஊக்குவிக்க படுகிறது என குற்றம் சாட்டி அதற்கு மாற்றாக கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்கள்.

ஜி.எஸ்.டி வரியில் 7,600 கோடி மோசடி:  ஒருவர் கூட தப்ப முடியாது என்ற மோடியின் வாக்குறுதி  பொய்யான கதை!

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் விதிமுறைகள் அனைத்துமே தெளிவாக உள்ளது, இதன் மூலம் போலி நிறுவனங்களை உருவாக்குவது, மற்றும் இதில் போலியாக நிறுவனங்களை உருவாக்குவது, அதன் மூலம் போலி இ-பில்களை தயாரித்து வரி செலுத்துவதில் மோசடியில் ஈடுபட முடியாது என தெரிவித்து அதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் என பல பா.ஜ.க-வினர் கூறி வந்தனர்.

மற்ற நாடுகளைப் போல் நம் நாட்டிலும் புதிய வரிமுறை அமல்படுத்தப்பட்டால் விலைவாசிகளும் குறையும், பொருளாதாரமும் வளர்ச்சி பெறும் என்று நாட்டு மக்களை நம்பவைப்பதற்கும் முயற்சி மேற்கொண்டது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு தற்போது 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், ஜி.எஸ்.டி வரிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த மார்ச் வரையிலான மாதாந்திர ஜி.எஸ்.டி ரிட்டன்கள் மற்றும் 2017-18ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி முழு ஆண்டுக்கான ரிட்டன்களை மத்திய ஜி.எஸ்.டி ஆணையத்தின் தணிக்கைக் குழு விரிவாக ஆய்வு செய்துள்ளது.

இதில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போலியான பில்களை தயாரித்து அதன் மூலம் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்கப்படும் என பா.ஜ.க அளித்த உத்தரவாதம் முழுக்க முழுக்க தோல்வியில் முடிந்தது”. என அவர் கடுமையாக விமரிசித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories