இந்தியா

ரோட்ல சொகுசா போறீங்கள்ல.. அப்போ டோல்கேட் காச கட்டுங்க : கறார் காட்டும் கட்கரி - வெறுப்பில் மக்கள்

மக்களவையில் நேற்று பேசிய அமைச்சர் நிதின் கட்காரி, நல்ல சாலைகள் வேண்டும் என்றால் சுங்க கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.

ரோட்ல சொகுசா போறீங்கள்ல.. அப்போ டோல்கேட் காச கட்டுங்க : கறார் காட்டும் கட்கரி - வெறுப்பில் மக்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவையில் நேற்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவை உறுப்பினர்கள் சுங்க கட்டணம் அதிக அளவில் வசூலிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்து பேசிய நிதின் கட்காரி, '' நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். சுங்கச் சாவடிகள் மூலமாக வசூலிக்கப்படும் பணமானது, கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

ரோட்ல சொகுசா போறீங்கள்ல.. அப்போ டோல்கேட் காச கட்டுங்க : கறார் காட்டும் கட்கரி - வெறுப்பில் மக்கள்

சுங்கக் கட்டண விகிதங்கள் அவ்வப்போது மாறுபடும்.ஆனால், சுங்க கட்டண முறை ரத்து செய்யப்பட மாட்டாது. நல்ல சாலைகள் வேண்டும் என்றால் சுங்க கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும். ஏனென்றால் அரசிடம் பணம் இல்லை. இருப்பினும், எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி பஸ்கள் மற்றும் மாநில அரசு பஸ்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

கடந்த ஐந்தாண்டுகளில் 40 ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலைத் திட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் '' என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories