இந்தியா

சாலை வசதி இல்லாமல் அபாயகரமான முறையில் ஆற்றைக் கடக்கும் மக்கள்! (வீடியோ)

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆற்றைக் கடக்க சாலை வசதி இல்லாததால் மக்கள் ஆபத்தான முறையில் கயிற்றின் மீது நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சாலை வசதி இல்லாமல் அபாயகரமான முறையில் ஆற்றைக் கடக்கும் மக்கள்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் தேவாஸ் பகுதியின் சன்காஞ் தாலுக்காவில் ஒரு சிறு ஆறு அமைந்துள்ளது. இந்த ஆறு அங்குள்ள இரண்டு கிராமங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. எனவே ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்குச் செல்லவேண்டும் என்றால் ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கிராமங்களில் வசித்து வருகின்றனர்.

எனினும் இந்தப் பகுதியில் நீண்ட காலமாக பாலம் இல்லாததால் மக்கள் ஆற்றைக் கடக்க ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். அதாவது ஆற்றின் நடுவே, மேலும் கீழுமாக இரண்டு கயிறுகளை கட்டி, அதனை பிடித்தவாறு ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குச் செல்கின்றனர்.

இந்த கயிற்றின் மூலம் தான் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என பல தரப்பினரும் பயணம் செய்கின்றனர். பல நேரங்களில் மக்கள் ஆற்றில் தவறி விழுந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆற்றைக் கடக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தால், நீச்சல் தெரிந்தவர்கள் கரையேறி வந்துவிடுவார்கள். நீச்சல் தெரியாதவர்கள் நிலை என்ன ஆகும்?

இவ்வளவு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு மக்கள் செல்வதற்கு பாலம் அமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories