இந்தியா

3 விமான நிலையங்கள்..50 ஆண்டுகள்..அதானிக்கு குத்தகைக்கு தந்த மோடி: அதிர்ச்சியில் அதிகாரிகள்

இந்தியாவிலுள்ள 3 விமான நிலையங்களை சுமார் 50 ஆண்டுக்குக் அதானிக்கு மத்திய அரசு குத்தகைக்கு கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 விமான நிலையங்கள்..50 ஆண்டுகள்..அதானிக்கு குத்தகைக்கு தந்த மோடி: அதிர்ச்சியில் அதிகாரிகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பிரதமர் மோடியின் நண்பருமான கௌதம் அதானிக்கு, இந்தியாவிலுள்ள 3 விமான நிலையங்களை சுமார் 50 ஆண்டுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்ரேட்க்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை கார்ப்ரேட் வசம் ஒப்படைப்பு என பல உதவிகளை முனைப்புடன் செய்து வருகிறது. ஏன் அண்மையில் கூட மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தனது விசுவாசத்தைக் காட்டும் வகையில் பல சலுகையை பட்ஜெட் வாயிலாக கொடுத்துள்ளது.

மேலும் கார்ப்ரேட்டுக்கு ஆதரவாக ரயில்வே துறை மற்றும் அதன் அச்சகம் போன்றவற்றைத் தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்திலேயே துணிந்து பா.ஜ.க அறிவித்துள்ளது. இதற்கு வரும் எதிர்ப்புகளை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாத ஒரு மேத்தனப்போக்குடன் பா.ஜ.க செயல்படுகிறது என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், லக்னோ மற்றும் கவுகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களின் நிர்வாகத்தை, தனியாருக்குக் கொடுப்பதென, மோடி அரசு கடந்தாண்டு முடிவெடுத்தது. இதற்காக ஏலமும் அறிவித்தது. இதில், அதிகத் தொகைக்கு ஏலம் கேட்டார் என்கிற அடிப்படையில் தான், 3 விமான நிலையங்களை அதானிக்கு மோடி அரசு தற்போது குத்தகைக்கு விட்டுள்ளது.

3 விமான நிலையங்கள்..50 ஆண்டுகள்..அதானிக்கு குத்தகைக்கு தந்த மோடி: அதிர்ச்சியில் அதிகாரிகள்

இதுதொடர்பாக மோடி அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், “அரசு மற்றும் தனியார் பங்களிப்பு அடிப்படையில், மங்களூரூ, அகமதாபாத் மற்றும் லக்னோ விமான நிலையங்களை, அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஏலத்தின்போது, அதானி குழுமம் அதிகத் தொகை அளிப்பதற்கு முன்வந்ததால், அந்த நிறுவனம் மேற்கண்ட 3 விமான நிலையங்களையும், 50 ஆண்டுகளுக்கு நிர்வாகம் செய்வதற்கு, விமான நிலைய ஆணையம் உரிமை வழங்கியுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விமானநிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனத்திடம் வேலைக்குச் சேர வேண்டும். இல்லாவிட்டால் வேறு விமான நிலையங்களுக்கு பணிமாறுதல் பெற்றுச் செல்ல வேண்டும். இதனால் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

மத்திய அரசின் இந்த திட்டமே படிப்படியாக அனைத்து விமான நிலையங்களையும் தனியார் மயமாக்குவதாகும். விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்தும் நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories