இந்தியா

பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளை வெளியிட உச்சநீதிமன்றம் முடிவு: தமிழ் மொழி மட்டும் இல்லை!?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆங்கில மொழியில் மட்டுமே வெளிவந்த நிலையில் தற்போது 5 மாநில மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஆனால் அதில் தமிழ் இடம்பெறவில்லை.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் ஆங்கிலம் அல்லது நாட்டின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியில் தீர்ப்புகளை வழங்குகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தவிர, உச்சநீதிமன்றம் தனது அதிகாரப்பூர்வ வலைதளபக்கத்தில் தீர்ப்புகளை இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் தீர்ப்புகளை வெளியிடுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, மொழிபெயர்க்கப்பட்ட தீர்ப்புகளை உச்சநீதிமன்றத்தின் “இன் ஹவுஸ்” மின்னணு மென்பொருள் பக்கத்தில் பதிவு செய்ய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுமதி வழங்கியுள்ளார். இந்த திட்டத்தின்படி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் 10 நாட்களுக்குள் 6 மொழிகளில் வெளியிடப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரளாவில் கொச்சியில் நடந்த சட்ட வல்லுநர்களின் மாநாட்டில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிராந்திய மொழிகளில் தீர்ப்பு வெளியிடுவதன் அவசியம் பற்றி பேசினார். அதனை சுட்டிக்காட்டி, தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே தீர்ப்பு வெளியிடும் நடைமுறைக்குப் பதிலாக பிராந்திய மொழிகளிலும் தீர்ப்புகள் வெளியிடப்படும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தீர்ப்புகளை மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியானாலும் தமிழ் மொழியில் தீர்ப்புகளைப் பெறமுடியாத நிலைமை உள்ளது. இந்தியைத் திணிக்க முயலும் பா.ஜ.க அரசைப் போல தமிழ் மொழியை நீதிமன்றம் புறக்கணிக்க முடிவுசெய்து விட்டதா எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். எளியமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இதனை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்த நீதிமன்றத்திற்கு தமிழகத்தில் எளியமக்கள் இருப்பது தெரியாமல் போனது வருந்தத்தக்க விஷயம் தான்.

தமிழகத்தில் இருந்து தொடர்ச்சியாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. பல நேரங்களில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சாராம்சம் புரியாமல் தமிழகத்தில் திட்டங்கள் கூட நிறுத்தி வைக்கப்பட்ட அவலம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தமிழ் மொழியிலும் தீர்ப்புகளை வெளியிடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories