இந்தியா

ஜார்கண்டில் இஸ்லாமிய இளைஞரை 7 மணிநேரம் கட்டி வைத்து அடித்துக் கொன்ற இந்துத்துவா கும்பல்!

இருசக்கர வாகனத்தை திருட வந்ததாகக் கூறி ஜார்கண்டில் இஸ்லாமிய நபரை மதவாதக் கும்பல் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறச் சொல்லி 7 மணிநேரம் கட்டிவைத்து அடித்ததில் அப்பாவி இளைஞர் உயிரிழந்தார்.

ஜார்கண்டில் இஸ்லாமிய இளைஞரை 7 மணிநேரம் கட்டி வைத்து அடித்துக் கொன்ற இந்துத்துவா கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை பரப்புவதற்காக பாஜகவினரும், இந்துத்துவா போன்ற மதவாதக் கும்பலும் நாடெங்கிலும் உள்ள சிறுபான்மையினர்களை தாக்குதலுக்கு உள்ளாக்கி வருகிறது.

அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பைக் திருட வந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மீது மதவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியது பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

ஜார்கண்டில் இஸ்லாமிய இளைஞரை 7 மணிநேரம் கட்டி வைத்து அடித்துக் கொன்ற இந்துத்துவா கும்பல்!

அந்த இளைஞரிடம் ஜெய் ஸ்ரீராம் என கூறச்சொல்லி ஏழு மணிநேரம் கட்டி வைத்து அடித்தில் மயக்கமடைந்து அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நடந்த போது சுற்றியிருந்த மக்கள் தாக்குதலுக்கு ஆளான இளைஞனை காப்பாற்றாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தது பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories