இந்தியா

மோடி பரப்பும் வெறுப்பை அன்பால் எதிர்கொள்வோம் - வயநாட்டில் ராகுல்காந்தி பேச்சு!

வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, அத்தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

மோடி பரப்பும் வெறுப்பை அன்பால் எதிர்கொள்வோம் - வயநாட்டில் ராகுல்காந்தி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், கேரளாவின் வயநாடு தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியை பெற்றார்.

இதனையடுத்து, தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

அப்போது மக்களைச் சந்திப்பதற்காக திறந்த வேனில் சென்று நன்றி தெரிவித்தார் ராகுல்காந்தி. பின்னர் மக்களிடையே பேசிய அவர், நாட்டு மக்கள் மீது மோடியின் அவரது தலைமையின் கீழ் உள்ள அரசும் உமிழ்ந்துவரும் வெறுப்பை அன்பாலும், பாசத்தாலும் எதிர்கொள்ளவதை காங்கிரஸ் தெரிந்து வைத்துள்ளது என கூறினார் ராகுல்காந்தி.

banner

Related Stories

Related Stories