இந்தியா

வயநாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் மூன்று நாட்களுக்கு கேரளாவின் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

வயநாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அமோக வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், முதன்முறையாக தனது வயநாடு தொகுதிக்கு இன்று வருகைத் தர உள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, இன்று பிற்பகல் முதல் மூன்று நாட்களுக்கு வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்

மேலும், பொதுமக்களையும், காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்தித்து பேசவுள்ளதாகவும், 15 பொது நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

banner

Related Stories

Related Stories