இந்தியா

உ.பி.யில் கட்டப்பட்ட கழிவறைகளில் காந்தி, தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட டைல்ஸ்!

தூய்மை இந்தியா என்ற பெயரில், தேசப்பிதாவை காலிலும், கழிவறையிலும் மிதிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர் பா.ஜ.க.வினர்.

உ.பி.யில் கட்டப்பட்ட கழிவறைகளில் காந்தி, தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட டைல்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமீபகாலமாக, மகாத்மா காந்தியை இந்துத்வா அமைப்பும், பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸும் எதிர்த்தும், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு ஆதரவு நிலையையும் காண்பித்து வருகின்றனர்.

அதேப்போல், காந்தியையும், தமிழக அரசையும் அவமதிக்கும் வகையில் உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள கிராமத்தில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

பா.ஜ.கவின் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத்தில் கழிவறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

அதில், லக்னோவில் உள்ள 13 கிராமங்களில் கட்டப்பட்டுள்ள கழிவறையில் மகாத்மா காந்தி, தேசியக் கொடியில் உள்ள அசோக சக்ரம் மற்றும் தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் ஆகியவை பொறிக்கப்பட்ட டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதைக்கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த அக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததை அடுத்து, கிராம வளர்ச்சித்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த செயலுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதாகவும் மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories