இந்தியா

இன்று கூடுகிறது காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்!

காங்கிரஸ் கமிட்டியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத்தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்

இன்று கூடுகிறது காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளனர்

இதில், காங்கிரஸுக்கான மக்களவைக் குழு தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. அதேபோல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன

கட்சியின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தலைவர் ராகுல்காந்திக்கு காங்கிரஸ் செயற்குழு அதிகாரம் வழங்கியுள்ளது. மேலும், ராகுல்காந்தியே காங்கிரஸின் தலைவராக தொடர வேண்டும் எனவும் இன்று நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

banner

Related Stories

Related Stories