இந்தியா

“தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் சந்தேகத்துக்கு இடம்தரக்கூடாது” : பிரணாப் முகர்ஜி அறிக்கை!

வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

“தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் சந்தேகத்துக்கு இடம்தரக்கூடாது” : பிரணாப் முகர்ஜி அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம்மாற்றப்படும் காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக 21 எதிர்க்கட்சிகள் கலந்தாலோசிக்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து முறையிடவிருக்கின்றனர்.

தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் சந்தேகத்துக்கு இடம்தரக்கூடாது” : பிரணாப் முகர்ஜி அறிக்கை!

அதில், “வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யப்படுவதாக வெளிவரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. மக்கள் அளிக்கும் தீர்ப்பு மிகமுக்கியமானது. அதை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.

வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories