இந்தியா

புதுச்சேரி மக்களை புறக்கணிக்கக்கூடாது : ஜிப்மர் இயக்குனரிடம் நாராயணசாமி வலியுறுத்தல்!

புதுச்சேரி மக்களை புறக்கணிக்கக்கூடாது என்று ஜிப்மர் மருத்துவமனை இயக்குனரிடம் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். 

புதுச்சேரி மக்களை புறக்கணிக்கக்கூடாது : ஜிப்மர் இயக்குனரிடம் நாராயணசாமி வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே சிகிச்சையில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வருபவருக்கு முன்னுரிமை கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு அத்தகைய காப்பீட்டு திட்டங்கள் இல்லாததால் அவர்களை அலைக்கழிப்பதாகவும் முதல்வர் நாராயணசாமியிடம் புகார் சென்றுள்ளது. மேலும், புதுவை மக்கள் ஜிப்மர் மருத்துவமனை புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை அடுத்து மே 13-ம் தேதி இந்த விவரம் தொடர்பாக ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வாலை தனது அலுவலகம் வரவழைத்து இதுகுறித்து விசாரணை நடத்தினார். காப்பீட்டு திட்டம் இல்லை என ஏதாவது காரணம் கூறி அவர்களை புறக்கணிக்காமல் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரியப்படுத்துங்கள். புதுச்சேரி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட காப்பீட்டு திட்டங்களை அமல்படுத்தினால் பயனடையும் நோயாளிகளின் விவரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.

banner

Related Stories

Related Stories