இந்தியா

6-வது கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவு : 60% வாக்குப்பதிவு!

7 மாநிலங்களைச் சேர்ந்த 59 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

6-வது கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவு : 60% வாக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. 7 மாநிலங்களைச் சேர்ந்த 59 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

மேற்கு வங்கம், டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டெல்லி உட்பட இன்று தேர்தல் நடைபெற்ற பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் கண்டறியப்பட்டு தேர்தல் அதிகாரிகளால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால், பல இடங்களில் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

6-வது கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவு : 60% வாக்குப்பதிவு!

59 தொகுதிகளில் இன்று நடைபெற்று முடிந்த தேர்தலில் மாலை 6 மணி வரை சராசரியாக 59.70% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 80% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநில வாரியாக வாக்குப்பதிவு விவரம் பின்வருமாறு (துல்லியமான விவரம் பின்னர் தெரியவரும்) :

பீகார் - 55.04%

ஹரியானா - 62.14%

மத்திய பிரதேசம் - 60.02%

உத்தர பிரதேசம் - 50.82%

மேற்கு வங்கம் - 80.13%

ஜார்கண்ட் - 64.46%

டெல்லி - 55.44%

banner

Related Stories

Related Stories