இந்தியா

பிரசாரத்தின் போது, மக்களிடம் ‘மொக்கை’ வாங்கிய ஸ்மிருதி இராணி!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வருகிற மே 12-ம் தேதி ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

பிரசாரத்தின் போது, மக்களிடம் ‘மொக்கை’ வாங்கிய ஸ்மிருதி இராணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

17-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், எதிர்வரும் மே 12-ம் தேதி 6-ம் கட்ட வாக்குப்பதிவும், மே 19 அன்று 7-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக வருகிற மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் 6-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. அது தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதா?” என மக்களிடையே கேள்வி எழுப்பினார்.

அதற்கு கூட்டத்தில் திரண்டிருந்த அனைவரும், “ஆம், எங்கள் கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர்” என ஒருசேர கூறினர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து, வாயடைத்துப் போன ஸ்மிருதி இராணி தர்ம சங்கடத்துக்கு ஆளாகினார்.

banner

Related Stories

Related Stories