இந்தியா

காங்கிரஸ் ஆட்சியில் 6 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்! - பா.ஜ.கவின் பிரசாரத்துக்கு காங்கிரஸ் பதிலடி!

காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டிருப்பதாக தேதி வாரியாக தகவல்களை வெளியிட்டு பா.ஜ.கவின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுத்துள்ளது காங்கிரஸ்.

காங்கிரஸ் ஆட்சியில் 6 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்! - பா.ஜ.கவின் பிரசாரத்துக்கு காங்கிரஸ் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது பா.ஜ.க அரசு தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துகிறது என பிரதமர் மோடியும், பா.ஜ.க-வினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக, காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டிருப்பதாக தேதி வாரியாக தகவல்களை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.

மேலும், தங்கள் ஆட்சியில் 6 முறை பாகிஸ்தான் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டுள்ளது எனவும், ஆனால், இராணுவ வீரர்களை தேவையில்லாமல் அரசியலுக்கு இழுக்க விரும்பாததால் அவற்றைப் பற்றிப் பேசவில்லை எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், தேசபக்தியைத் தூண்டிவிடும் பா.ஜ.க-வின் தந்திரமான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பிரசாரத்துக்கு பதிலடியாக காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் 6 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்! - பா.ஜ.கவின் பிரசாரத்துக்கு காங்கிரஸ் பதிலடி!

முதல் தாக்குதல் ஜூன் 19, 2008-ல் பூஞ்சின் பாதல் செக்டாரில் நடத்தப்பட்டது. இரண்டாவது தாக்குதல் ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 1, 2011-ல் நீலம் ஆற்றுப்படுகையில் உள்ள சார்தா செக்டாரில் நடத்தப்பட்டது.

மூன்றாவது தாக்கல் ஜனவரி 6, 2013-ல் சுவான் பாத்ரா செக்போஸ்ட் பகுதியில் நடத்தப்பட்டது. அடுத்த தாக்குதல் ஜூலை 27 மற்றும் ஜூலை 28, 2013-ல் நசாபியர் செக்டாரில் நடத்தப்பட்டது. ஐந்தாவது தாக்குதல் நீலம் பள்ளத்தாக்கில் ஆகஸ்ட் 6, 2013-ல் நடத்தப்பட்டது, ஆறாவது முறையாக ஜனவரி 14, 2014-ல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது என காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories