இந்தியா

விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெற்றது பெப்சி: விவசாயிகள் மகிழ்ச்சி!

காப்புரிமை பெற்ற உருளைக்கிழங்குகளைப் பயிரிட்டதாகக் குஜராத் விவசாயிகள் 4 பேர் மீது தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக பெப்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெற்றது பெப்சி: விவசாயிகள் மகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வெளிநாட்டு கார்ப்ரேட் குளிர்பான நிறுவனம் பெப்சி கோ. இந்த லேஸ் சிப்ஸ்களை தயாரித்து விற்பனை செய்துவருகிறது. இந்த நிறுவனம் உருளைக் கிழங்கு சிப்ஸ்னை தயாரிப்பதற்கு FL 2027 என்ற பிரத்தியேக கிழங்குகளை பயன்படுத்திவருகிறது. இதற்கான காப்புரிமையை அந்த நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த விவசாயிகள் 4 பேர், பெப்சி பயன்படுத்திய உருளைக் கிழங்கு ரகத்தைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. காப்புரிமை பெற்று வைத்திருப்பதால், FL 2027 ரக உருளைக் கிழங்கு விதையைப் பயன்படுத்தியதற்காக, ரூ. 1 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பெப்சி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வழக்கு தொடரப்பட்ட 4 விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினர். இந்தியா முழுவதும் விவசாயிகள் அமைப்பு, மாணவர்கள் அமைப்பு எதிர்க்கட்சிகள் என விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினார்கள்.

போராட்டத்தின் கோரிக்கைகளை முன்வைத்து பெப்சி கோவுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து 4 விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை பெப்சி திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories