இந்தியா

“யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என மோடி சிசிடிவி மூலம் பார்ப்பார்”- எம்எல்ஏ பகிரங்க மிரட்டல்!

பா.ஜ.க-வினரும், பா.ஜ.க கூட்டணியில் இருப்போரும் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி மக்களிடம் மிரட்டல் விடுக்கும் தொனியில் வாக்குசேகரித்து வருவது கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

Ramesh katara - Anbumani
Ramesh katara - Anbumani
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பா.ஜ.க-வினரும், பா.ஜ.க கூட்டணியில் இருப்போரும் தொடர்ச்சியாக ஜனநாயக விரோத பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி மக்களிடம் மிரட்டல் விடுக்கும் தொனியில் வாக்கு சேகரித்து வருவது கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ரமேஷ் கடாரா, “யார் யார் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கிறீர்கள்.. யார் யார் காங்கிரஸுக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதையெல்லாம் கண்காணிக்க பிரதமர் மோடி வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். பா.ஜ.க-வுக்கு குறைவான வாக்குகள் வரும் பகுதியில் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது.” என மிரட்டல் விடுத்துள்ளார்.

Modi
Modi

சமீபத்தில், பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “வாக்குச்சாவடிகளில் நாம் மட்டும்தான் இருப்போம். புரியுதுல்ல..” என உள்நோக்கத்துடன் பேசி சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories