திமுக அரசு

”மலையாளிகளின் சித்திரத்தை மாற்றிய வரலாற்று நாயகர் மு.க.ஸ்டாலின்” - புகழ்ந்து தள்ளிய கேரள தொலைக்காட்சி!

"தமிழர்களைப் பற்றிய மலையாளிகளின் சித்திரத்தை மாற்றிய வரலாற்று நாயகர் ஸ்டாலின்" என கேரளத் தொலைக்காட்சி புகழாரம் சூட்டியுள்ளது.

”மலையாளிகளின் சித்திரத்தை மாற்றிய வரலாற்று நாயகர் மு.க.ஸ்டாலின்” - புகழ்ந்து தள்ளிய கேரள தொலைக்காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘மருநாடன் மலையாளி’ கேரளத்தின் புகழ்பெற்ற இணையப் பத்திரிகையும், தொலைக்காட்சி அலைவரிசையும் ஆகும். இம்மாதம் 4ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து, அத்தொலைக்காட்சி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்ச்சியில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பேசியதன் முக்கியப் பகுதிகளை அவரது வாய்மொழியாகவே கேட்கலாம்.

"நண்பர்களே! நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு செய்தி உண்டு. அது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மைக்காலங்களில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு. அதை நான் வாசிக்கிறேன்.

"ஒரு நல்ல அரசியல்வாதியும் ஆட்சியாளரும்" என்பது அந்தச் செய்தியின் தலைப்பு.

"சாலையின் நடுவே பாதுகாப்பு போலிஸார் நிற்க வேண்டாம்" - மு.க.ஸ்டாலின்.

"எனது புகழ் பாடுவதற்காக அல்ல; மக்களின் பிரச்சினைகளை நேரிடுவதற்காகத்தான் மக்கள் உங்களைச் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்" - மு.க.ஸ்டாலின்.

"பாட நூல்களில் இடம்பெறும் முக்கிய நபர்களின் பெயர்களின் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதிய வால்களைக் கத்தரிக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின்.

"உங்களுடைய பெயர்களின் பின்னாலும் உங்கள் பிள்ளைகளின் பெயர்களின் பின்னாலும் சாதிப் பெயர்களைப் போட்டுக் கொள்ளாதீர்கள்!" - மு.க.ஸ்டாலின்.

"யாருடைய கால்களிலும் விழுந்து வணங்காதீர்கள். யாரும் யாரைக்காட்டிலும் உயர்ந்தவரும் இல்லை. யாரும் யாரைக்காட்டிலும் தாழ்ந்தவரும் இல்லை" - மு.க.ஸ்டாலின்.

"தமிழக மக்களில் யாரேனும் போலிஸ் சித்திரவதைக்கு உள்ளானால், அந்தப் போலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்படுவார்" - மு.க.ஸ்டாலின்.

"தமிழ்நாட்டிலிருந்து கொங்கு நாட்டைப்பிரிக்க வேண்டும் எனும் விஷமத்தனமான பிரச்சாரத்தில் இனி யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" - மு.க.ஸ்டாலின்.

"தனியார் மருத்துவமனைகளிலும் கோவிட் தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்படும்" - மு.க.ஸ்டாலின்.

"மக்களுக்கு ரூ.4000 உதவிப் பணம் வழங்குவது அவசியப்பட்டால் தொடரும். தமிழகத்தைக் கொள்ளையிட்டுச் சேர்க்கப்பட்ட முன்னாள் ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யபட்டு மக்களுக்குச் செலவழிக்கப்படும்" - மு.க.ஸ்டாலின்.

"நான் உடுத்தியிருக்கும் இந்த வேட்டியும் சட்டையும் தவிர எனக்கு வேறெதுவும் வேண்டாம்" - மு.க.ஸ்டாலின்.

இவைதான் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கும் செய்தி.

”மலையாளிகளின் சித்திரத்தை மாற்றிய வரலாற்று நாயகர் மு.க.ஸ்டாலின்” - புகழ்ந்து தள்ளிய கேரள தொலைக்காட்சி!

இதைப் படித்ததும் எனக்கு வியப்பாக இருந்தது., இப்படி ஒரு முதலமைச்சரா என்று. அடுத்து ஒரு அய்யம். இவையெல்லாம் உண்மைதானா என்று. நான் கூகுள் வழி ஆய்வு செய்தேன். இவையனைத்தும் உண்மையென்று புலனாகியது. அப்போது எனக்கு வேறு ஒன்றும் புரிந்தது. திராவிடக் கருத்தியலுக்கு ஆதரவான ஊடகங்கள் மட்டுமில்லை; இடதுசாரி ஊடகங்களும், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான வலதுசாரி ஊடகங்களுங்கூட தி.மு.க. அரசின் நூறு நாட்களை மதிப்பிட்டு எழுதியிருக்கும் கட்டுரைகளைப் படித்தபோது, நான் வாயடைத்துப் போனேன். மலையாளிகளில் சிலர் தமிழர்களை ‘பாண்டிகள்' என்று கேலி பேசுவதை நாமறிவோம்.

தமிழர்களைக் குறித்து மலையாளிகளுக்கு ஒரு சித்திரம் உண்டு. தமது அபிமான நடசத்திரங்களைத் தமிழர்கள் ஆராதிப்பார்கள். அவர்களுக்கு பாதபூஜை செய்வார்கள். அவர்களுக்காக தங்கள் உயிரைத் துறப்பதற்குக் கூட சித்தமாக இருப்பார்கள். இப்படித்தான் நாம் தமிழ்நாட்டைப் பற்றிக் கேட்டிருக்கிறோம். இப்போது ஸ்டாலின் இதற்கெல்லாம் முடிவுரை எழுதிவிட்டார்.

இனிமேல் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் தெய்வங்களல்லர்!

இனிமேல் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் தெய்வங்களல்லர். மக்கள் பக்தர்கள்அல்லர். ‘தமிழகத்தில் பிராமணரல்லாத வரும் அர்ச்சகர் ஆகலாம். எல்லோரும் சமம்’ என்பதை நோக்கி தமிழகத்தை முன்னெடுத்துச் செல்கிறார் ஸ்டாலின். அரசு இயந்திரம் மக்களுக்குச் சேவை செய்வதற்குத்தான். மக்கள் அளிக்கும் மனுக்கள். அவை, பிறப்பு -இறப்புச் சான்றிதழாக இருக்கலாம். வீடு கட்டுவதற்கு ஒப்புதல் கோரும் மனுவாக இருக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்யாத அரசு அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலின் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தினார். அப்போது எளிய மக்களிடமிருந்து 4,52,645 மனுக்கள் அவரிடம் கொடுக்கப்பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்ற நூறு நாட்களுக்குள் அவர் 2,29,216 மனுக்களுக்குத் தீர்வு கண்டுவிட்டார்.

அனைத்துக் கட்சியினரையும் அழைத்து ஆலோசிக்கிறார்!

அவர் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அலுவலர்களையும் அனைத்துக் கட்சியினரையும் அழைத்து ஆலோசிக்கிறார். "2030ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் தமது அரசின் இலக்கு" என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். அவரது நூறு நாள் சாதனைகளை வைத்து மதிப்பிட்டால் இதை அவர் சாதிப்பார் என்று நம்பலாம்.

அரசு அதிகாரிகளே தொழில்முனைவோரை அணுகுகின்றனர்!

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான உரிமங்கள் உடனடியாக வழங்கப்படுகின்றன. உதவித்தொகை தவணைகளாக அல்ல, ஒரே தடவையில் வழங்கப்படுகிறது. தொழில் முனைவோர் அரசு அதிகாரிகளின் பின்னால் ஓடவேண்டாம். மாறாக, அரசு அதிகாரிகள் தொழில் முனைவோரை அணுகி, வேண்டிய உதவிகள் செய்கின்றனர். இதன் விளைவுகள் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த நூறு நாட்களில் தொழில் தொடங்குவதற்கான 17,141 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையொப்பம் இடப்பட்டிருக்கின்றன. 7117 கோடி ரூபாய் முதலீட்டிலான தொழில்கள் துவங்க ஒன்பது பெரிய நிறுவனங்கள் கால்கோள் நாட்டியிருக்கின்றன.

இதன் மூலம் சுமார் 83,000 வேலை வாய்புகள் உருவாகும். கேரளத்தில் இப்படி ஒருநிலையை நம்மால் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாது. தொழில் துவங்குவதும் நடத்துவதும் கேரளாவில் எத்துணை சிரமமானது என்பதை நாமறிவோம். ஆனால் தமிழகம், இதற்கு நேர் மாறாக விளங்குகிறது. தொழில் வளம் மிக்க மாநிலமாக தமிழகம் வளர்கிறது. அதே வேளையில் தொழிலாளர் நலன்களும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி போட சிபாரிசு வேண்டியதில்லை!

மக்கள் அனைவருக்கும் ரூ.4000 வழங்கியது தமிழக அரசு. அர்ச்சகர்களுக்குப் பணமும் அரிசி பருப்பும் வழங்கியது. மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கியது. பெண்களுக்குப் பேருந்துப் பயணம் இலவசம். தனியார் மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்துகிறது. தடுப்பூசி முகாம்களை மாநிலமெங்கும் அரசு நடத்துகிறது. தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கட்சிக்காரர்களின் சிபாரிசு வேண்டியதில்லை.

எல்லா மாநிலங்களும் முதல்வரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

இவ்வாறான, பல்வேறு முற்போக்கான நடவடிக்கைகள் மூலம், ஸ்டாலின் அவர்கள் ஒரு முன்மாதிரி முதல்வராக விளங்குகிறார். கேரளா உட்பட எல்லா மாநிலங்களும் அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும். ஸ்டாலின் அவர்களே! உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்! இவ்வாறு அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அக்காணொலியில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories