தமிழ்நாடு

"ஆ முக்கிய மந்திரி இண்ட பெயர் பினராயி விஜயன் அல்ல, MK ஸ்டாலின் ஆனு" - தமிழகத்தை கண்டு வியக்கும் கேரளம்!

மலையாள செய்தி தொலைக்காட்சியில் மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் முதலமைச்சர் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருக்கிறது.

"ஆ முக்கிய மந்திரி இண்ட பெயர் பினராயி விஜயன் அல்ல, MK ஸ்டாலின் ஆனு" - தமிழகத்தை கண்டு வியக்கும் கேரளம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா இரண்டாவது அலையின் உச்சகட்ட பாதிப்பு மற்றும் கடுமையான நிதிநிலைமையுடன் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். ஆனால், இடர்பாடுகளை மருத்துவர்கள், பொருளாதார அறிஞர்கள் என பல நிபுணர்களின் ஆலோசனையை பெற்று விரைவாகவே சமாளித்து அதில் வெற்றிக் கனியை ருசித்திருக்கிறார்.

அதன் பயனாக தற்போது மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 1500 பேரே கொரோனாவுக்கு பாதிக்கப்படுகின்றனர். அதுவும் எவ்வித தொய்வும் இல்லாமல் சிகிச்சைகள் செவ்வனே செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டு மழைகள் தொடர்ந்து பொழிந்து வருகிறது.

வெறும் நூறே நாட்களின் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான அரசு பொற்கால ஆட்சியை வழங்கியுள்ளது என்றும் போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் உள்ள மலையாள செய்தி தொலைக்காட்சியில் மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் முதலமைச்சர் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருக்கிறது.

அதில் பங்கேற்ற பி.சி.விஷ்ணுராம் என்பவர் 100 நாட்களுக்குள் முதலமைச்சர் மேற்கொண்ட மாற்றங்கள் என்னென்ன என்று பேசினார். அப்போது, 2 கோடி குடும்பங்களுக்கு ரூ.4,000 நிவாரணம், 14 மளிகைப் பொருட்கள், பெட்ரோல் மீதான மாநில வரியை 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை.

கொரோனா காலத்தில் உயிரை பணையம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 30 மற்றும் 20 ஆயிரம் ரூபாயும், இதர சுகாதார பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவால் உயிரிழக்கும் முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடு என இவை அனைத்தும் 100 நாட்களில் ஒரு முதலமைச்சர் செய்தவையாகும்.

அந்த முலமைச்சரின் பெயர் பினராயி விஜயன் அல்ல. மு.க.ஸ்டாலின் ஆகும் என அவர் பேசியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கேரள தொலைக்காட்சியில் விஷ்ணுராம் என்பவர் பேசிய காணொலி தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகிறது.

அந்த வீடியோவை திமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எண்ணி புகழ்பாடி வருகின்றனர். மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் போது கேரள அரசின் செயல்பாட்டை கண்டு தமிழகம் வியந்தது. தற்போது தமிழ்நாட்டை பார்த்து கேரளம் வியந்து போயுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories