தேர்தல்2021

புதுச்சேரி உப்பளம்தொகுதியில் திமுக முன்னிலை- வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறிய அதிமுக வேட்பாளர்!

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அனிபால் கென்னடி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

புதுச்சேரி உப்பளம்தொகுதியில் திமுக முன்னிலை- வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறிய அதிமுக வேட்பாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. உப்பளம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது, தபால் வாக்குகளில் தி.மு.க வேட்பாளர் அனிபால் கென்னடி முன்னிலை பெற்றார்.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதல்சுற்று எண்ணப்பட்ட போது, தி.மு.க.வேட்பாளர் அனிபால் கென்னடி 750 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அ.தி.முக., வேட்பாளர் அன்பழகன் வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறினார்.

முதல் சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் அனிபால் கென்னடி 4 ஆயிரத்து 19 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் அன்பழகன் 2ஆயிரத்து 182 வாக்குகளும் பெற்றார். தி.மு.க வேட்பாளர் அனிபால் கென்னடி 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

banner

Related Stories

Related Stories