திமுக அரசு

“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு!

மேற்கு வங்கத்தில் CRPF நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மேற்கு வங்கத்தில் 3 கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 4-வது கட்டமாக இன்று அம்மாநிலத்தின் 44 தொகுதிகளுக்குத் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று காலை வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வந்த நிலையில், கூச்பெஹார் மாவட்டம், சித்லாகுச்சி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திடீரென பா.ஜ.கவினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

அப்போது, போலிஸாரும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசுகையில், “மத்தியப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த 4 பேரின் உயிரிழப்புக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதில் சொல்ல வேண்டும்.

மத்திய படையினரின் செயல்களை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தற்காப்புக்காகத்தான் சுட்டோம் என்று மத்திய படைகள் கூறுகின்றன. இதுபோன்ற பொய்களைக் கூறுவதற்கு தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டும்.

மக்களின் ஆதரவை இழந்துவிட்டோம் என பா.ஜ.கவுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டதால், மக்களைக் கொல்லும் சதியில் ஈடுபடுகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சரின் சதியின் ஒருபகுதிதான் இது. இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்

நான் அனைவரிடமும் கேட்பது என்னவென்றால், அமைதியாக வாக்களியுங்கள். கொல்லப்பட்ட 4 பேருக்குப் பழிவாங்குதல் என்பது தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிப்பதுதான். தேர்தல் தொடங்கியதிலிருந்து சுமார் 18 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 12 பேர் நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்கள்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories