இந்தியா

"நான் வங்கத்துப் பெண் புலி; குஜராத் குண்டர்களுக்கு ஒருபோதும் வளைந்துகொடுக்கமாட்டேன்” - மம்தா ஆவேசம்!

திரிணாமுல் காங். தலைவர் மம்தா பானர்ஜி, “நான் பா.ஜ.கவின் தாக்குதல்களுக்கு வளைந்து கொடுக்காத வங்கத்து பெண் புலி” என தேர்தல் பரப்புரையின்போது பேசியுள்ளார்.

"நான் வங்கத்துப் பெண் புலி; குஜராத் குண்டர்களுக்கு ஒருபோதும் வளைந்துகொடுக்கமாட்டேன்” - மம்தா ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூன்று கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 5 கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்கத் தேர்தல் பரப்புரையின்போது பேசிய அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி, “நான் பா.ஜ.கவின் தாக்குதல்களுக்கு வளைந்து கொடுக்காத வங்கத்து பெண் புலி” எனப் பேசியுள்ளார்.

கூச் பெஹாரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “பா.ஜ.கவினர் அசாமில் இருந்து குண்டர்களைக் கொண்டுவந்து, வெடிகுண்டுகளை வெடித்து மக்களை அச்சுறுத்துவார்கள். அச்சம்கொள்ள வேண்டாம்.

எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வாக்களிப்பதை மத்திய படைகள் தடுக்கின்றன. மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், அவர்கள் அசாமை போல இங்கும் தடுப்பு முகாம்களைக் கட்டுவார்கள். அவர்கள் 14 லட்சம் வங்காளர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. நாங்கள் அந்த ஏழை மக்களுக்காக போராடுகிறோம்.

"நான் வங்கத்துப் பெண் புலி; குஜராத் குண்டர்களுக்கு ஒருபோதும் வளைந்துகொடுக்கமாட்டேன்” - மம்தா ஆவேசம்!

பா.ஜ.கவின் பணத்தால் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் வங்கத்துப் பெண் புலி; நான் உடைந்துபோவேன்; ஆனால் ஒருபோதும் பா.ஜ.கவுக்கு வளைந்துபோகமாட்டேன்.

குஜராத்திகள் வங்கத்தை கைப்பற்றுவதை தடுக்கவேண்டும். எங்களுக்கு பா.ஜ.க தேவையில்லை. வங்காளம் வங்காளத்தவரிடமே இருக்கும், குஜராத்தில் இருந்து வந்த குண்டர்கள் வங்கத்தை கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம்” எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories