திமுக அரசு

“என்னது கொரோனா தடுப்பூசியை மோடி கண்டுபிடிச்சாரா?” - ஊர் பூராம் விஞ்ஞானிகளாகவே இருந்தா எப்படி?

“கொரோனா தொற்று உலகத்தையே அச்சுறுத்தியபோது முதன்முதலாக தடுப்பூசி கண்டுபிடித்தவர் பிரதமர் மோடி” எனப் பேசியுள்ளார் அமைச்சர் யஉதயகுமார்.

“என்னது கொரோனா தடுப்பூசியை மோடி கண்டுபிடிச்சாரா?” - ஊர் பூராம் விஞ்ஞானிகளாகவே இருந்தா எப்படி?
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையாற்றுவதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, இன்று மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அவரை வாழ்த்திப் பேசிய அ.தி.மு.க அமைச்சரும், திருமங்கலம் தொகுதி வேட்பாளருமான உதயகுமார், “இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த சாதனையாளர், கொரோனா தொற்று உலகத்தையே அச்சுறுத்தியபோது முதன்முதலாக தடுப்பூசி கண்டுபிடித்து இந்தியாவிற்கு கௌரவம் பெற்றுக்கொடுத்தவர் பிரதமர் மோடி” எனப் பேசியுள்ளார்.

“என்னது மோடி கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தாரா? ஐஸ் வைக்கணும்னா வாய்க்கு வந்ததைப் பேசுவாரா” என மேடையில் இருந்தவர்களே ஆச்சரியப் பார்வை பார்த்தனர்.

தோல்வி பயத்தால் சொந்தத் தொகுதிகளிலேயே மூத்த அமைச்சர்களான ஓ.பி.எஸ், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலர் முடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் மக்களிடம் நடித்து கெஞ்சி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

திருமங்கலத்தில் போட்டியிடும் அமைச்சர் உதயகுமார் ஒருபடி மேலே சென்று, எதிர்ப்படுபவர்கள் எல்லோருடைய காலிலும் விழுந்து வாக்குக்காக கெஞ்சி வருகிறார்.

தோல்வி கண்ணுக்கு எதிரே தெரிவதால், தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தாவுவதில் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்குள் பெரும் போட்டியே நடக்கும் எனத் தெரிகிறது.

banner

Related Stories

Related Stories