திமுக அரசு

எழும்பூர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் திட்டம்? - தி.மு.க தரப்பில் புகார் மனு!

எழும்பூர் தொகுதியின் அனைத்து வாக்குச் சாவடிகளையும் பதற்றமானதாக அறிவித்து, வாக்காளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற  அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் திட்டம்? -  தி.மு.க தரப்பில் புகார் மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க சட்டப்பிரிவு இணைச் செயலாளரும், எழும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான இ.பரந்தாமன் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி கைப்பற்றுவதில் தற்போதைய அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் ஈடுபட்டதால் குறைவான வாக்குகளே பதிவானதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அ.தி.மு.க கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஜான் பாண்டியன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் ஜாமின் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் வாக்குச்சாவடியை கைப்பற்றுதல், வாக்காளர்களை கடத்துதல் போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஜான்பாண்டியன் ஈடுபட உள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அவற்றிலிருந்து வாக்காளர்களை பாதுகாத்து, அச்சமின்றி ஜனநாயக கடமையை செலுத்தும் வகையில் எழும்பூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளையும் பதற்றமானவை என அறிவிக்க வேண்டும் என்றும், அவற்றுக்குத் தேவையான சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்பை வழங்க தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இ.பரந்தாமன் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories