திமுக அரசு

“உங்க சோந்த பிள்ளை, சோந்த ஊர்க்கார்” : ஆட்டுக்காரரின் ஓட்டுக்கு வேட்டு வைத்த நமீதா தமிழ்! 

அரவக்குறிச்சியில் பாஜக  சார்பில் போட்டியிடும் அண்ணாமலையை ஆதரித்து நடிகர் நமீதா பிரசாரத்தில் ஈடுபட்டது இணையத்தில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

“உங்க சோந்த பிள்ளை, சோந்த ஊர்க்கார்” : ஆட்டுக்காரரின் ஓட்டுக்கு வேட்டு வைத்த நமீதா தமிழ்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டமன்றத்திற்காக 16வது தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்காக தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இப்படி இருக்கையில், அதிமுகவின் கூட்டணியில் உள்ள இதுவரையில் ஒரு எம்.எல்.ஏக்களை கூட கொண்டிராத பா.ஜ.கவும் தமிழகத்தில் கால் பதித்திட வேண்டும், வடமாநிலங்களை போன்று மதவாத அரசியலை புகுத்தி தமிழகத்தை சீரழித்திட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாஜகவினரும் அது சார்ந்த அமைப்புகளும் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளது.

இதற்கிடையே அண்மையில் பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்டிருந்த தேர்தல் அறிக்கையிலும் நீட் நீக்கப்படாது, புதியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருதம் புகுத்தப்படும் போன்ற சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளதே தமிழக மக்களை கொதிப்படையச் செய்திருக்கிறது.

இந்த நிலையில் சினிமா நட்சத்திரங்களை கொண்டு வாக்கு சேகரிக்கிறோம் என்ற பெயரில் கும்மாளம் போட்டு தமிழையும் தமிழ் மக்களையும் கேலிக்குரியதாக்கி வருகிறது பா.ஜ.க.

அவ்வகையில், கரூர் மாவட்ட அரவக்குறிச்சியில் போட்டியிடும் முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலையை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது “உங்க சோந்த பிள்ளை, சோந்த ஊர்க்காரர்; அவர்க்கு உங்க சப்போர்ட் குடுங்க” என நமீதா பேசியிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கிண்டலுக்கு ஆளானதோடு, இவ்வாறு தமிழர்கள் பற்றியும், தமிழகத்தின் நிலை பற்றியும் அறிந்திராத தெரிந்திருக்க வாய்ப்பில்லாதவர்களை பிரபலங்கள் என்பதற்காக மட்டுமே வரவழைத்து வாக்கு கேட்பது போதாதென்று செம்மொழியான தமிழ் மொழியை கொலையோ கொலை என கொல்கிறார்கள் என்று இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள்.

இதனிடையே, வேடிக்கை என்னவென்றால் வாக்கு சேகரிக்கச் சென்ற இடத்தில் பாஜகவின் வேட்பாளரான அண்ணாமலையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories