திமுக அரசு

“வாக்காளர்களுக்கு ஆன்லைனில் பணப் பரிமாற்றம்” - அ.தி.மு.க அமைச்சரின் எகிடுதகிடு தேர்தல் முறைகேடு!

வாக்காளர்களுக்கு ஆன்லைன் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யப்படுவதாக இணை தலைமைத் தேர்தல் அலுவலரிடம் தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“வாக்காளர்களுக்கு ஆன்லைனில் பணப் பரிமாற்றம்” - அ.தி.மு.க அமைச்சரின் எகிடுதகிடு தேர்தல் முறைகேடு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது ஆதரவாளர்கள் மூலம் தொகுதியில் இருக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் செல்போன் மூலம் ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க அமைச்சர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அந்த தொகுதியில் இருக்கும் அனைத்து வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கும் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்வதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இணை தலைமைத் தேர்தல் அலுவலர் ஆனந்திடம் தி.மு.க சார்பில் விளக்கமான புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணில் இருந்து தனிநபர்களுக்கு பணப்பட்டுவாடா ஆன்லைனில் நடைபெறுகிறதா என்பது குறித்து முழுமையாக கண்காணிக்கிறோம் என தேர்தல் அதிகாரி உத்தரவாதம் அளித்துள்ளார்.

ஏற்கனவே அனைத்து வங்கிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, இதுபோன்று பல்வேறு எண்களுக்கு குறிப்பிட்ட எண்ணிலிருந்து ஆன்லைன் பரிமாற்றம் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க அமைச்சர் விஜயபாஸ்கர், தான் செய்யும் தேர்தல் பிரச்சாரத்தை அலுவலக இணையதளத்தில் இன்று வரை பதிவிட்டு வருகிறார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. அதை தடுக்க வேண்டும் எனவும் தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories