திமுக அரசு

டோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை.. ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை!

குமாரபாளையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு நேரங்களில் டோக்கன் கொண்டு வரும் பெண்களுக்கு பட்டு சேலை வழங்கும் முன்னாள் அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்

 டோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை.. ஜெ.பிறந்தநாள்  பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம் முழுவதும் தற்போது தேர்தல் ஜுரம் சூடுபிடித்துள்ள நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணியின் சொந்த தொகுதியாகவும் இந்த தொகுதியில் குமாரபாளையம் நகராட்சி மற்றும் பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் கடந்த 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோலப்போட்டி நடத்தியதாகவும் அதற்காக பெண்களுக்கு இலவசமாக தட்டு மற்றும் டிபன் பாக்ஸ் ஆகியவை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் தற்பொழுது வீடு வீடாக சென்று பகல் நேரங்களில் டோக்கன் கொடுப்பதும் அந்த டோக்கனை கொண்டு வரும் பெண்களுக்கு தங்கள் வீடுகளில் வைத்து பட்டுசேலை வழங்கி வரும் அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இது போல் இன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு பகுதியில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணனின் தொழிற்சாலையில் வைத்து டோக்கன் கொண்டு வரும் பெண்களுக்கு விதிமுறைகளை மீறி இலவச பட்டு சேலைகள் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories