தேர்தல் 2024

மாயாவதிதான் பாஜகவின் B டீம்... பகுஜன் சமஜால் 16 இடங்களை இழந்த இந்தியா கூட்டணி: வெளியான ஆய்வால் அதிர்ச்சி!

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியானது பாஜகவின் பி டீமாக செயல்பட்டு வந்துள்ளதாக வெளியான ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக இந்தியா கூட்டணி விமர்சித்து வருகிறது.

மாயாவதிதான் பாஜகவின் B டீம்... பகுஜன் சமஜால் 16 இடங்களை இழந்த இந்தியா கூட்டணி: வெளியான ஆய்வால் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை அகற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்தியா கூட்டணியை உருவாக்குவதற்காக எதிர்க்கட்சிகள் தங்களுள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து முன்வந்தனர். பாஜகவுக்கு எதிராக பிரியும் ஒவ்வொரு வாக்கையும் சேர்த்து, இந்த தேர்தலில் களம் காண வேண்டும் என்றே இந்தியா கூட்டணி முனைந்தனர்.

இதற்காக பல மாதங்களாக நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டது. அதில் தலித் கட்சியாக அறியப்படும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் ஒன்று. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த பகுஜன் சமாஜ், இந்த முறை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருந்தது.

மாயாவதிதான் பாஜகவின் B டீம்... பகுஜன் சமஜால் 16 இடங்களை இழந்த இந்தியா கூட்டணி: வெளியான ஆய்வால் அதிர்ச்சி!

மேலும் பாஜகவுக்கு எதிராக ஒருசில விமர்சனங்களும் மாயாவதி முன்வைத்ததோடு, தான் தலித் எதிரியான மோடிக்கு எதிரானவர் என்ற பேச்சையும் முன்வைத்தார். இதனால் மோடிக்கு எதிரான அணிகள் ஒன்றிணையும் இந்தியா கூட்டணியும், மாயாவதிக்கு பலமுறை அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதனை மாயாவதி நிராகரித்த வந்தார்.

முன்னதாக பாஜகவுடன் மாயாவதி கூட்டணி வைத்தது தலித் சமூக மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்திய நிலையில், இந்தியா கூட்டணியின் அழைப்பையும் அவர் நிராகரித்தது விமர்சனங்களை எழுப்பியது. எனினும் இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி நாடு முழுவதும் தனித்து போட்டியிட்டது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டது.

மாயாவதிதான் பாஜகவின் B டீம்... பகுஜன் சமஜால் 16 இடங்களை இழந்த இந்தியா கூட்டணி: வெளியான ஆய்வால் அதிர்ச்சி!

தொடர்ந்து நாடு முழுவதும் இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்தித்த நிலையில், தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தனர். சென்ற இடமெல்லாம் இந்தியா கூட்டணிக்கு மக்கள் தங்கள் அமோக ஆதரவை அளித்தனர்.

இதனால் பாஜக திட்டமிட்டு தனது மத கலவர ஆயுதத்தை கையில் எடுத்தது. மதத்தை வைத்து வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டது. இருப்பினும் மக்கள் தற்போது விழித்துக்கொண்டுள்ளனர். இந்த தேர்தலில் மக்கள் பாஜகவை ஓரங்கட்ட எண்ணி வாக்களித்தனர். ஆனாலும் பல பகுதிகளில் கள்ள வாக்கு செலுத்தியும், மிரட்டி வாக்களிக்க வைத்தும் என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது பாஜக.

பல இன்னல்களையும் கடந்து தற்போது இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் பாஜக 240 இடங்களை பெற்றும், தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுகளோடு ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டுகிறது. எனினும் இந்த தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

மாயாவதிதான் பாஜகவின் B டீம்... பகுஜன் சமஜால் 16 இடங்களை இழந்த இந்தியா கூட்டணி: வெளியான ஆய்வால் அதிர்ச்சி!

குறிப்பாக 80 தொகுதிகளை கொண்ட பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி சுமார் 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் தனித்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த சூழலில் மாயாவதியின் வாக்கு பிரிவு யுக்தியானது உ.பி-யில் மட்டும் சுமார் 16 தொகுதிகளில் இந்தியா கூட்டணி தோல்வியடைய காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

அதாவது உபியில் உள்ள அலிகர், அக்பர்பூர், ஃபரூகாபாத், ஃபதேபூர் சிக்ரி, மிர்சாபூர், மீரட், புல்பூர், பன்ஸ்கான், பிஜ்னோர், ஷாஜகான்பூர் மிஸ்ரிக், உன்னாவ் உள்ளிட்ட 16 தொகுதிகளில் பாஜக ஒரு சில ஆயிரங்கள் வாக்கு வித்தியாசங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது.

அதிலும் ஃபரூகாபாத் 2,678; பன்ஸ்கான் தொகுதியில் 3,150 ; புல்பூர் 4,332; அலிகர் 15,647 என ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசங்களில் மட்டுமே பாஜக இந்தியா கூட்டணி வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது.

மாயாவதிதான் பாஜகவின் B டீம்... பகுஜன் சமஜால் 16 இடங்களை இழந்த இந்தியா கூட்டணி: வெளியான ஆய்வால் அதிர்ச்சி!

ஆனால் அதே சமயம், பகுஜன் சமாஜ் கட்சி பிஜ்னோர் தொகுதியில் மட்டும் 2.18 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. மேலும் மிர்சாபூரில் 1.44 லட்சம் வாக்குகளும், மிஸ்ரிக்கில் 1.11 லட்சம், ஷாஜகான்பூரில் 82 ஆயிரம் என அதிகளவில் வாக்குகள் பெற்றுள்ளது. இதனால் பகுஜன் சமாஜ் கட்சி திட்டமிட்டே எதிர்க்கட்சிகளுக்கு தலித் வாக்குகள் சென்றுவிட கூடாது என்பதற்காக இந்தியா கூட்டணியில் சேரவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

தான் மோடிக்கு எதிரானவர் என்று கூறி வரும் மாயாவதி, மோடிக்கு எதிரான பல விஷயங்களுக்கு வாயை திறக்காமலே இருந்து வந்தார். அதோடு அரசியல் வாரிசாகவும் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்கப்பட்ட தனது அண்ணன் மகனான ஆகாஷ் ஆனந்த், கட்சி பொதுக்கூட்டங்களில் மோடி மற்றும் பாஜகவின் உண்மை முகத்தை கிழித்ததற்காக 'பக்குவம் இல்லை' என்று இரண்டு பதவிகளில் இருந்தும் நீக்கினார்.

இப்படி பாஜகவுக்கு மறைமுகமாக தனது ஆதரவை மாயாவதி தெரிவித்து வந்த நிலையில், தற்போது அவரது வாக்கு பிரிவு யுக்தி பாஜகவுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ளது. ஒருவேளை இந்த தேர்தலில் மாயாவதி இந்தியா கூட்டணியுடனோ அல்லது பாஜக கூட்டணியுடனோ, கூட்டணி வைத்திருந்தால் இந்தியா கூட்டணி வெல்ல வாய்ப்புகள் அதிகளவில் காணப்பட்டுள்ளது.

மாயாவதிதான் பாஜகவின் B டீம்... பகுஜன் சமஜால் 16 இடங்களை இழந்த இந்தியா கூட்டணி: வெளியான ஆய்வால் அதிர்ச்சி!

ஏனெனில், பாஜகவுக்கு எதிரான அலைகள் வட இந்தியாவில் அதிகளவில் இருப்பதால், மக்கள் இந்தியா கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அதே வேளையில் மாயாவதி இந்தியா கூட்டணியுடன் இருந்திருந்தால், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் மட்டுமின்றி, இந்தியா கூட்டணி மற்றும் பகுஜன் சமாஜுக்கு ஆதரவான வாக்குகளை இந்தியா கூட்டணி பெற்றிருக்கும். இதனால் இந்தியா கூட்டணி வென்றிருக்கும்.

ஒருவேளை அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும், பாஜகவுக்கு எதிராக பகுஜன் ஆதரவாளர்களே இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பர். எப்படி இருந்தாலும் இந்தியா கூட்டணி வென்றிருக்கும். ஆனால் மாயவாதியோ திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் (இந்தியா கூட்டணி) வாங்க கூடிய வாக்குகளை பிரித்துள்ளார்.

அவ்வாறு அவர் பிரித்ததன் எதிரொலி சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலே பாஜகவால் வெற்றி பெற முடிந்தது. எனவே மாயாவதியின் வாக்கு பிரிவு பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் உ.பி மாநில தலித் மக்கள் தற்போது பகுஜன் சமாஜ் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுக பாஜகவின் B டீமாக செயல்பட்டு வருவதுபோல், தற்போது பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் பாஜகவின் B டீமாக செயல்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories