அரசியல்

சர்வாதிகாரத்தை வென்ற இந்தியா கூட்டணி : தனிப் பெரும்பான்மையை இழந்த பா.ஜ.க!

1989ல் கே.எல். அத்வானி சொன்ன ‘Winner comes Second,’இம்முறை இந்தியா கூட்டணி வசமானது.

சர்வாதிகாரத்தை வென்ற இந்தியா கூட்டணி : தனிப் பெரும்பான்மையை இழந்த பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

NDA கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளபோதும், மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறோம் என பா.ஜ.க.வினர் தெரிவித்து வரும் போதும், மோடியின் முகத்தில் மட்டும் ஒரு துளி கூட, உண்மையான மகிழ்ச்சியில்லை.

கடந்த 2019 தேர்தல் முடிவுகளையடுத்து, பா.ஜ.க.வினரால், அரங்கேற்றப்பட்ட ஆரவாரங்கள் எதுவும், தற்போதைய 2024 தேர்தல் முடிவுகளையடுத்து காணாமல் போனது.

காரணம், பா.ஜ.க.வின் தனிப்பெரும்பான்மை இழப்பு.

இதே சூழல் தான், கடந்த 1989ஆம் ஆண்டு தேர்தலிலும் அரங்கேறியது. அப்போது 88 இடங்களுடன் இரண்டாம் இடம் பிடித்த பா.ஜ.க.வை வர்ணித்து, எல்.கே அத்வானி ‘Winner comes Second!’ என்றார்.

ஆனால், தற்போது தன்வினை தன்னைச்சுடும் என்பது போல, அப்போதைய பா.ஜ.க.வின் ‘Winner comes Second!’ தற்போது இந்தியா கூட்டணியின் வசம் சென்றிருக்கிறது.

அதற்கு சான்று தான், காங்கிரஸ் பெற்ற பெருமைக்குரிய வெற்றி. பா.ஜ.க.வுடன் நேரடி போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி விகிதம் அதிகரித்துள்ளது.

சர்வாதிகாரத்தை வென்ற இந்தியா கூட்டணி : தனிப் பெரும்பான்மையை இழந்த பா.ஜ.க!

தலித் மற்றும் ஆதிவாசி தொகுதிகளில் காங்கிரஸ் வாக்கு விகிதம் அதிகரித்திருக்கிறது. இந்துத்துவத்தின் பட்டறை எனப்பட்ட உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது.

பாஜக வென்ற தொகுதிகளில் கூட 23 இடங்களில் வாக்கு வித்தியாசம் வெறும் 1 முதல் 2.5 சதவிகிதம்தான் இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக கூட்டணித் தலைவர்களை நம்பி இயங்க வேண்டிய சூழ்நிலைக்கு பாஜகவைக் கொண்டு வந்திருக்கிறது.

அடுத்த மாதம் NRC கொண்டு வருகிறோம்; அடுத்த வருடம் பொது சிவில் சட்டம், அதுக்கு அடுத்த வருடம் நாட்டின் பெயரையே ‘பாரதம்’ என்று மாற்றுகிறோம்,

அதன் பிறகு உடனே இந்து இராஷ்டிரம்தான்,' என்றெல்லாம் குதூகலித்துக் கொண்டிருந்த இந்துத்துவவாதிகள் முகத்தில் ஈ ஆடவில்லை.

இவை எதுவுமே இனிமேல் நிகழ வாய்ப்பில்லை. சொல்லப் போனால், இப்போது இருக்கும் குடியுரிமை திருத்தச்சட்டம் கூடத் தொடருமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது.

சர்வாதிகாரத்தை வென்ற இந்தியா கூட்டணி : தனிப் பெரும்பான்மையை இழந்த பா.ஜ.க!

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்பது தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. ஆனால், 'பெண்களின் தாலியை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடுவார்கள்!' என்று பிரச்சாரத்தில் பயமுறுத்தியவர் மோடி.

வரும் மாதங்களில் ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு, இந்த 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் போது, மோடி என்ன செய்யப் போகிறார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, மிகவும் சிறப்பு வாய்ந்தது என்னவென்றால், இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு வந்த ஆபத்து இனி இருக்காது என்பதுதான்.

இனி மோடி என்ன, அமித் ஷா என்ன, யோகியே நினைத்தாலும் கூட இந்தியாவின் சிறுபான்மையினர் மீது எளிதாக கை வைத்து விட முடியாது. நிதிஷ், சந்திரபாபு நாயுடு மற்றும் வலுவான எதிர்க் கட்சிகள் தொட விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

சர்வாதிகாரத்தை வென்ற இந்தியா கூட்டணி : தனிப் பெரும்பான்மையை இழந்த பா.ஜ.க!

ஊடகங்களின் சுதந்திரம் மறு கட்டமைக்கப்படும். அமலாக்கத் துறையையும், வருமான வரித் துறையையும் கண்ட மேனிக்கு தவறாக பயன்படுத்தும் முறையும் குறையும்.

'புல்டோசர் பாபா' இனிமேல் புல்டோசரையேத் தொட முடியாது. ராம நவமி அன்று மசூதிகள் - கிறிஸ்தவ ஆலையங்கள் மேல் ஏறி காவிக்கொடி கட்ட முடியாது.

கங்கையில் ஆரத்தி எடுப்பது, குமரியில் தியானம் செய்வது, போன்ற வெத்துவேட்டு நாடகங்களை எல்லாம் நிறுத்தி விட்டு, நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வரவேண்டி வரும்.

இவை எல்லாம் பாஜகவினருக்குத் தெரிந்திருப்பதால்தான் சோகமாக இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் செய்ய விடாமல் பாஜகவை தடுத்து நிறுத்தியதால்தான் எதிர்க் கட்சிகள் வெற்றிப்பெருமிதத்தில் இருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்திய ஜனநாயகம் வென்றது. மதச்சார்பின்மை, சமய சார்பின்மை (Secularism) வென்றது.

banner

Related Stories

Related Stories