தேர்தல் 2024

5 தொகுதிகளில் போட்டி... 6 தொகுதிகளில் வெற்றி... அம்பலமான கருத்துக்கணிப்புகளின் முடிவுகள்!

5 தொகுதிகளில் போட்டி... 6 தொகுதிகளில் வெற்றி... அம்பலமான கருத்துக்கணிப்புகளின் முடிவுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஜூன் 1) நிறைவடைந்து விட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. அந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு ஆதரவாகவே வெளியாகியுள்ளது. குறிப்பாக பாஜக கூட்டணி 350 முதல் 371 இடங்களுக்கும் மேல் வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானது..

மேலும் நாடு முழுவதும் பாஜகவே பெரும்பான்மை பெரும் என்றும், பாஜக ஆளாத முக்கிய மாநிலங்களில் கூட பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் NewsX, NDTV, India News ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 371, இந்தியா கூட்டணி 125, பிற 47 என்று ஒரே மாதிரியான முடிவுகள் வெளியானது. இதனால் பாஜகவை கொடுத்ததை இந்த நிறுவனங்கள் அப்படியே வெளியிட்டுள்ளது என விமர்சிக்கப்பட்டது.

5 தொகுதிகளில் போட்டி... 6 தொகுதிகளில் வெற்றி... அம்பலமான கருத்துக்கணிப்புகளின் முடிவுகள்!

தொடர்ந்து சொல்லி வைத்தது போல் பாஜக 370 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் அனைவர் மத்தியிலும் பெரும் சந்தேகத்தை எழுப்பிய நிலையில், தற்போது போட்டியிட்ட தொகுதிகளை விட அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 தொகுதிகளில் போட்டி... 6 தொகுதிகளில் வெற்றி... அம்பலமான கருத்துக்கணிப்புகளின் முடிவுகள்!

அதாவது AxisMyIndia + இந்தியா டுடே சார்பில் நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், பீகாரில் பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சி (LJP) 4-6 இடங்களில் வெற்றிபெறும் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், லோக் ஜனசக்தி கட்சி 5 தொகுதிகளிலேயே போட்டியிடுகிறது. ஆனால் கருத்டுக்கணிப்பிலோ, 6 தொகுதி வரை வெற்றி பெரும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி Zee News கருத்து கணிப்பு முடிவுகளில் 10 தொகுதிகளே உள்ள ஹரியானாவில் பாஜக கூட்டணி 16- 19 இடங்கள் வரை வெற்றிபெறும் என்றும், 4 தொகுதிகளே உள்ள இமாச்சல பிரதேசத்தில் பாஜக கூட்டணி 6-8 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கருத்துக்கணிப்பு போலி என்று நிரூபணமாகியுள்ளது.

போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பாஜக ஒரு பிம்பத்தை உருவாக்குவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories