தேர்தல் 2024

“உண்மையை சொல்ல வேண்டும்; மக்களின் சர்வே எங்களிடம் உள்ளது” - ஊடகங்களுக்கு கார்கே வலியுறுத்தல்!

“உண்மையை சொல்ல வேண்டும்; மக்களின் சர்வே எங்களிடம் உள்ளது” - ஊடகங்களுக்கு கார்கே வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (ஜூன் 1) நிறுவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து மக்களுக்காக வாக்குறுதிகளை அள்ளி கொடுத்தனர். இந்த தேர்தல் பாசிச பாஜகவிடம் இருந்து நமது நாட்டை மீட்கும் கடைசி முயற்சி என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது.

ஒரு பக்கம் நாட்டை காப்பாற்றத் துடிக்கும் இந்தியா கூட்டணி, மறுபக்கம் நாட்டை மேலும் மோசமாக்க முனையும் பாஜக தலைமையிலான NDA கூட்டணி என்று இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவியது. தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு வலுவான ஆதரவுகள் இருந்தபோதிலும், வட மாநிலங்களில் பாஜகவுக்கான எதிர்ப்பலைகள் எழுந்ததை இந்த தேர்தல் மூலம் காண முடிகிறது.

“உண்மையை சொல்ல வேண்டும்; மக்களின் சர்வே எங்களிடம் உள்ளது” - ஊடகங்களுக்கு கார்கே வலியுறுத்தல்!

குறிப்பாக பாஜக ஆளும் குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கான எதிர்ப்புகளை மக்கள் மத்தியில் காணமுடிகிறது. அதே போல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் இந்தியா கூட்டணிக்கான மக்களின் ஆதரவுகளையே பிரிதிபலித்தது. இந்த முறை மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் அரசையே மக்கள் விரும்புவது கருத்துகணிப்புகள் மூலம் தெரியவந்தது.

பாசிச பாஜக அரசை ஆட்சியில் இருந்து துரத்த எதிர்க்கட்சிகளுடன் நாட்டு மக்களும் தற்போது தயாராகியுள்ளனர். தேர்தலில் பாஜக தனது சூழ்ச்சி வளைகளை விரித்து வெற்றி பெற கள்ள ஓட்டு, மிரட்டுதல் என பலவற்றை செய்தது. இருப்பினும் அதனையும் வெளிக்கொண்டு வந்து, தேர்தலை நேர்மையாக சந்தித்தது இந்தியா கூட்டணி.

தற்போது நாடே தேர்தல் முடிவு வெளியாகும் நாளான ஜூன் 4-ம் தேதிக்கு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதனை முன்னிட்டு இன்றுடன் தேர்தல் நிறைவடையும் நிலையில், இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிபிஐ (எம்), சிபிஐ, ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக தலைவர்கள் கலந்துகொண்டனர்.

“உண்மையை சொல்ல வேண்டும்; மக்களின் சர்வே எங்களிடம் உள்ளது” - ஊடகங்களுக்கு கார்கே வலியுறுத்தல்!

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், அனைவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மல்லிகார்ஜுன கார்கே பேட்டியளித்தார். இதுகுறித்து கார்கே பேசியதாவது, “மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட விதம் குறித்து விவாதித்தோம். மக்களின் ஆதரவு இந்தியா கூட்டணிக்கு இருக்கிறது.

இந்தியா கூட்டணி சுமார் 295-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியமைக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஊடகங்கள் உண்மையை சொல்ல வேண்டும். மக்களின் சர்வே எங்களிடம் உள்ளது.

295 தொகுதிகளுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பது மக்களிடன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. ஆனால் பாஜகவினர் அரசின் கணக்கெடுப்பை கூறுகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை இந்தியா கூட்டணி கட்சிகளின் முகவர்கள் அங்கேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.

இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories