தேர்தல் 2024

“உங்கள் விலை என்ன?” - மம்தா பானர்ஜி குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய முன்னாள் நீதிபதி !

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து முன்னாள் நீதிபதியும் பாஜக வேட்பாளருமான அபிஜித் கங்கோபாத்யாய்க்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

“உங்கள் விலை என்ன?” - மம்தா பானர்ஜி குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய முன்னாள் நீதிபதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமிருக்கும் தொகுதிகளுக்கு ஜூன் 1-ம் தேதியோடு தேர்தல் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் பிரசாரத்தின்போது பாஜக வேட்பாளரும் முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“உங்கள் விலை என்ன?” - மம்தா பானர்ஜி குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய முன்னாள் நீதிபதி !

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் கங்கோபாத்யாய், கடந்த மார்ச் மாதம் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் அவர் மேற்கு வங்கத்தின் தாம்லுக் (Tamluk) தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது இந்த தொகுதிக்கு வரும் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தீவிரமாக தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

“உங்கள் விலை என்ன?” - மம்தா பானர்ஜி குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய முன்னாள் நீதிபதி !

இந்த நிலையில், நேற்று கிழக்கு மிட்னாபூரின் சைதன்யபூர் என்ற இடத்தில் பிரசாரம் மேற்கொண்ட அபிஜித் கங்கோபாத்யாய், "மம்தா பானர்ஜி அவர்களே உங்கள் விலை ரூ.10 லட்சமா?" என்று அருவருக்கத்தக்க வகையில் பேசினார். இவரது பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories