தேர்தல் 2024

அந்நியனாக மாறிய மோடி... “யாருப்பா இப்படி பண்ணது?” - வீடியோ வெளியிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல் !

அந்நியனாக மாறிய மோடி... “யாருப்பா இப்படி பண்ணது?” - வீடியோ வெளியிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி பிரதமர் மோடி வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி மதம் சார்ந்து பேச்சுகள் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்து - முஸ்லீம் பிரிவினைவாத பேச்சுகளும் பேசி வருகின்றனர் பாஜகவினர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து பெரும் அவதூறு பேச்சை பேசியுள்ளார் மோடி.

நமது நாட்டின் செல்வதை எல்லாம் இஸ்லாமியர்கள் எடுத்து செல்வதாகவும், அவர்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள், அவர்களுக்கும் நமது சொத்துகள் அவர்களுக்கு (இஸ்லாமியர்களுக்கு) கொடுக்கப்படுகிறது" என்று இரு சமூக மக்களுக்கு இடையே வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சை பேசினார்.

அந்நியனாக மாறிய மோடி... “யாருப்பா இப்படி பண்ணது?” - வீடியோ வெளியிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல் !

மோடியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து எழுந்ததோடு, அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டு கண்டனம் தெரிவித்தது. எனினும் தனது வெறுப்பு பேச்சை மோடி தொடர்ந்து வருகிறார்.

இவரது பேச்சால் பாஜகவுக்கு பல இடங்களிலும் மக்கள் தங்கள் வெறுப்பை காட்டி வருகின்றனர். பாஜக வேட்பாளர்களுக்கும் மக்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற கூடிய தொகுதிகளில் கூட தோல்வியை தழுவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கிறது. தோல்வி பயத்தில் உளறி வரும் மோடி, தற்போது தனது பேச்சையே அப்படியே மாற்றி பேசியுள்ளார்.

அந்நியனாக மாறிய மோடி... “யாருப்பா இப்படி பண்ணது?” - வீடியோ வெளியிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல் !

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாகவும், வெறுப்பாகவும் பேசிய மோடி, தற்போது இசுலாமியர்கள் குறித்து பாராட்டியும் பேசியுள்ளார். மேலும் ஹிந்து - முஸ்லீம் பிரிவினைவாதத்தை பேசினால், தான் ஒரு பிரதமராக இருக்க தகுதியற்றவர் என்றும், தான் எந்த காலத்திலும் இந்து - முஸ்லீம் என்று பிரித்து பார்த்ததில்லை என்றும் பேசியுள்ளார்.

இவரது பேச்சு மோடியின் இரட்டை வேடத்தை காட்டுவதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில், விக்ரம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'அந்நியன்' படத்தின் வசனத்தை வீடியோவாக வெளியிட்டு, மோடி மாறி மாறி பேசுவதாக குறிப்பிட்டு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "எடிட் செய்தது யார்?" என்று கேள்வி கேட்டு 'சூப்பர்' என்றும், சிரிப்பு எமோஜிகளை பதிவிட்டு கிண்டலடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories