தமிழ்நாடு

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து : எச்.ராஜாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்... வழக்கை ரத்து செய்ய மறுப்பு !

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகி எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து : எச்.ராஜாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்... வழக்கை ரத்து செய்ய மறுப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

எச்.ராஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் 2018ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் எச்.ராஜா மீது அளித்தனர்.

தொடர்ந்து எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து : எச்.ராஜாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்... வழக்கை ரத்து செய்ய மறுப்பு !

அதனை ரத்து செய்ய எச்.ராஜா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது உச்சநீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எச்.ராஜா மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், படித்த, அரசியலில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கூறி எச்.ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories