தேர்தல் 2024

நீலிக்கண்ணீர் அரசியல் நடிகர் திலகம் சிவாஜியை மிஞ்சிய மோடியின் ‘கப்சா’ : வெளுத்து வாங்கிய சிலந்தி !

நடிகர் திலகம் சிவாஜி இன்று உயிருடன் இருந்திருந்தால், ஓடிப்போய் பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி... மக்களால் அங்கீகரிக்கப்பட்டு தரப்பட்ட நடிகர் திலகம் பட்டத்தை அவரது காலடியில் சமர்ப்பித்திருப்பார்

நீலிக்கண்ணீர் அரசியல் நடிகர் திலகம் சிவாஜியை மிஞ்சிய மோடியின் ‘கப்சா’ : வெளுத்து வாங்கிய சிலந்தி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடிகர் திலகம் சிவாஜி இன்று உயிருடன் இருந்திருந்தால், ஓடிப்போய் பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி... தனக்கு மக்களால் அங்கீகரிக்கப்பட்டு தரப்பட்ட நடிகர் திலகம் பட்டத்தை அவரது காலடியில் சமர்ப்பித்து, "ஐயா... இந்தப் பட்டத்துக்கு என்னைவிட தகுதி படைத்தவர் நீங்கள்தான்! உங்களது நடிப்புக்கு முன் திரையில் நான் ஏற்றப் பாத்திரத்துக்கு ஏற்ப சிறப்பாக நடித்ததற்காக பெற்ற இந்தப் பட்டம் ஒரு ஜுஜுபி தான்! ஆகா... எத்தனை தத்ரூபமாக நடிக்கிறீர்கள்... எங்களுக்கெல்லாம் சில நேரங்களில் 'கிளிசரின்' போட்டுதான் அழுகை வரும்... ஆனால் ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த கொலையை நினைத்து... எத்தனை தத்ரூபமாக... கிளிசரின் இல்லாமலேயே கண்களை கசக்கிக் கொண்டீர்கள்! அப்பப்பா... அற்புதம்... அதி அற்புதம்... பார்த்தவர் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பு...” என்றெல்லாம் புகழ்ந்துரைத்திருப் பார்...

அதேபோல உலக மகா பொய்யன் என்றும் பொய்யை உண்மை போலப் பேசிடும் ஆற்றலில் அவனுக்கு நிகர் அவன்தான் என்றும் உலக வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் கோயபல்ஸ் மட்டும் உயிருடன் இருந்து இன்று மோடியின் பேச்சுக்களை கேட்டிருந்தால் அவர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து தன்னை அவர் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருப்பான்!

'உலக மகா புளுகன் என இதுவரை வரலாற்றில் இடம் பெற்றிருந்தேன். என்னையும் மிஞ்சி விட்டீர்கள்... வருங்கால வரலாறு இனி என் இடத்தில் தங்களை வைத்துத்தான் கொண்டாடும்; அப்பப்பா, இப்படி எல்லாம் தத்ரூபமாக பொய்களைச் சொல்லிட யாரால் முடியும்? இந்த ஆற்றலில் உங்களிடம் நான் கற்க வேண்டியது ஏராளம் உள்ளது... நீங்கள் என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்கும் வரை உங்கள் காலை விட மாட்டேன்' எனக் கதறி இருப்பான்... அத்தனை லாவகமாக பல பொய்களைக் கோர்வையாக்கி, அதை உண்மை என்று மக்களை நம்ப வைக்கும் முயற்சிகளில் தத்ரூபமாக நடித்துக் காட்டியிருக்கிறார் பிரதமர் மோடி!

நீலிக்கண்ணீர் அரசியல் நடிகர் திலகம் சிவாஜியை மிஞ்சிய மோடியின் ‘கப்சா’ : வெளுத்து வாங்கிய சிலந்தி !

"உளறல்... கப்சா... கபட நாடகம்... நாகூசாது பொய்க் கூறுதல் - திரித்துப் பேசுதல்... பித்தலாட்டம், நீலிக்கண்ணீர்..." இவைகளின் ஒட்டுமொத்த தொகுப்பாக ஒரு உரையை பிரதமர் சேலத்தில் பேசித் தீர்த்துவிட்டார்! அவருக்கும், பா.ஜ.க.வுக்கும் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து தி.மு.க.வுக்கு தூக்கமே போய்விட்டது எனப் பேசத் துவங்கினார்! பா.ஜ.க.வின் பாசிச, சர்வாதிகார ஆணவ அரசியலை ஒழித்துக்கட்ட ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை உயர்த்திப் பிடித்து, இந்தியா கூட்டணி உருவானது!

டெல்லி, உ.பி., பஞ்சாப் என பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க நம்பியிருந்த மாநிலங்களில் கூட்டணி உருவானதும் எதிர்ப்பு வலுத்ததும், மோடி நடுங்கத் தொடங்கிவிட்டார். அய்யோ, ஒரு வேளை ஆட்சி போய்விட்டால் இனி நினைத்த நேரத்தில் உலகம் சுற்ற முடியாதே; இடத்துக்குத் தகுந்த வேடம் தரித்து விதவிதமாய் குல்லாய் அணிந்து நாடகம் நடத்த இயலாமல் தனது ராஜ வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி விழுந்து விடுமே என்றெல்லாம் எண்ணி அமைதி இழந்து, தூக்கம் தொலைத்து சுற்றிக் கொண்டிருக்கும் மோடி காமாலைக் கண் கொண்டு மற்றவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்! மோடியின் மிரட்டல், உருட்டல்களுக்கு பயப்படாது நிமிர்ந்து நின்று உரிமைக் குரலை உரத்து எழுப்பிக் கொண்டிருக்கும் தி.மு.க.வின் வரலாற்றை அறியாமல் உளறிக் கொண்டிருக்கிறார் மோடி!

அவரது அன்றைய மொத்தப் பேச்சே 'கப்சா' தான். 40 ஆண்டுகளுக்கு முன் மோடி கைலாச யாத்திரை சென்றபோது சேலத்து ரத்தினவேலுவைச் சந்தித்ததாகவும் அவர் தான் தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும் பழைய கதையை நினைவு கூர்ந்தார். அவர் சந்தித்த ரத்தினவேலு யார் என்று கண்டறிய ஊடகங்கள் சில கிளம்பிவிட்டன. 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் கற்கத் தொடங்கிய மோடி இன்றும் தமிழைப் பேசுவதாக எண்ணி அதை மென்று தின்று கொண்டிருப்பதைத்தான் பார்க்க முடிகிறது! பின்னர் இதே சேலத்துக்கு, தான் பலமுறை வந்துள்ளதாகக் கூறி ரத்னவேலுவை இன்று நினைவு கூர்ந்தவர், அந்தப் பலமுறை சேலத்து விஜயத்தின் போது ஏன் நினைவு கூரவில்லை; அழைத்துப் பேசவில்லை என்பது புரியாத புதிர்தான்!

நீலிக்கண்ணீர் அரசியல் நடிகர் திலகம் சிவாஜியை மிஞ்சிய மோடியின் ‘கப்சா’ : வெளுத்து வாங்கிய சிலந்தி !

அடுத்து சேலத்து ஆடிட்டர் பா.ஜ.க.விற்காக உழைத்து உயிரைவிட்ட ஆடிட்டர் ரமேஷ்க்காக பொதுக்கூட்ட மேடையிலேயே கண்ணீர்விட்டார் - அவரைப் பற்றி தொடர்ந்து பேச முடியாமல், தொண்டை அடைக்க அப்படியே சில மணித்துளிகள் பேச முடியாது தவித்தார்! சேலத்துக்குப் பலமுறை வந்துள்ளதாகக் கூறிய மோடி; அந்த பா.ஜ.க. தொண்டர் வீட்டிற்குச் சென்று வீட்டாருக்கு ஆறுதல் வழங்கியதாக ஒரு போதும் செய்தி வெளி வந்ததில்லை. இப்போது தேர்தல் நெருங்கியதும் ஆடிட்டர் இறந்து 11 ஆண்டுகள் கழித்து கண்ணீர் விடுகிறார்! இதுபோன்று விடுக்கும் போலிக் கண்ணீரை முதலைக் கண்ணீர் என்று கூறுவார்கள்; இனி அதற்கு மோடிக் கண்ணீர் என்றே பெயர் சூட்டலாம்; அத்தனை ஆற்றல் மிகு நடிப்பு!

அவற்றை விடுங்கள்; இவை போன்ற நாடகங்கள் அன்றாடம் நமது மோடி அவர்கள் நடத்திக்காட்டிக் கொண்டிருப்பவைதான்! ஆனால் சமீப காலமாக மற்றவர்கள் பேச்சைத் திரித்து அதற்கு வேறு பொருளை இட்டுக்கட்டி தந்து - அதாவது எதிர்க்கட்சியினர் பேசாததைப் பேசியதாகக் கூறி மடை மாற்றம் செய்திடும் அற்பச் செயல்களையும் தொடர்ந்து செய்து வருகிறார் மோடி!

பஜ்ரங்தள் போன்ற மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என கருநாடகத் தேர்தலுக்கு முன் அம்மாநில காங்கிரஸ் கட்சி கூறிய கருத்தை திரித்து, பஜ்ரங்கி என்றால் அனுமான்... அனுமானைத் தடை செய்யச் சொல்லுகிறது காங்கிரஸ்... காங்கிரஸ் ஒரு இந்து மத விரோதக் கட்சி; ஓட்டளிக்கும் முன் 'ஜெய் பஜ்ரங்கபலி' என்று கூறிக்கொண்டே வாக்களியுங்கள் என்று பேசினார்.

இப்படி திரித்து பொருள் கூறி ஒரு மத துவேஷத்தை ஏற்படுத்தி - அந்த நெருப்பில் குளிர் காய நினைத்து, தேர்தல் முடிவில் மூக்குடைபட்டார் மோடி! அவர் திரித்த கயிற்றை சாட்டையாக்கி அதன் மூலம் பொய்யுரைக்கு சவுக்கடி தந்து, தேர்தலில் பொய்யருக்கு தோல்வியைத் தந்தனர் கருநாடக மாநில மக்கள்! ஆனால் அதிலே மோடி பாடம் பெற்றதாகத் தெரியவில்லை! கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, சனாதன தர்மத்தின் பேரால் நாட்டில் ஒரு கூட்டம் நடத்திடும் சமூக அநீதி களை எடுத்துரைத்து அத்தகைய சனாதன தர்மத்தை ஏற்க முடியாது என்று பேசியதைத் திரித்து, இந்து தர்மத்தை எதிர்க்கிறது தி.மு.க. என்று பேசினார் மோடி!

நீலிக்கண்ணீர் அரசியல் நடிகர் திலகம் சிவாஜியை மிஞ்சிய மோடியின் ‘கப்சா’ : வெளுத்து வாங்கிய சிலந்தி !

அவரது நாலாந்தர பேச்சை உண்மை என எண்ணி சில வடநாட்டு போலி சாமியார்கள் உதயநிதி தலைக்கு விலை நிர்ணயிக்குமளவு பயம் காட்டிப் பார்த்தனர்! இந்த பூச்சாண்டிகள் - உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்த இயக்கமல்ல; தி.மு.கழகம் என்றாலும் - ஒரு உச்சப் பதவியில் இருந்து பேசுபவர் எத்தகைய பொறுப்புடன் பேச வேண்டும் என்பதை எல்லாம் மறந்து, கண்ணியம் காக்கத் தவறிய பேச்சால் நாட்டில் வெறுப்பு அரசியலுக்கு தொடர்ந்து தூபம் போட்டுக் கொண்டிருப்பவர் தான் மோடி. தனது ஆட்சி நீடிக்க இப்படி எந்தவிதப் பொய்யையும் - நாக்கூசாது பேசும் பொய்யர் திலகம் அவர்!

இப்போது மும்பையில் பிரம்மாண்ட கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதை மோடி போகுமிடமெல்லாம் திரித்துப் பேசி மக்களிடையே புதுக் கரடி விடத் தொடங்கியுள்ளார் அந்தக் கரடியை சேலத்திலும் எடுத்து ஓட விட்டுள்ளார் அவர்! மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி நடத்திடும் போராட்டம் தனிப்பட்ட மோடி என்ற நபரை எதிர்த்து அல்ல பிரதமர் மோடி எனும் சக்தி (அதிகாரம்) யை எதிர்த்து போராடுகிறோம் என்று மோடியிடம் உள்ள அதிகார சக்தி குறித்து ராகுல் காந்தி பேசியதைத் திரித்து 'இந்துப் பெண் கடவுளுக்கும், மதத்திற்கும் எதிரானவர் ராகுல்' எனும் பிம்பத்தைக் கட்டமைக்கத் தொடங்கியுள்ளார் மோடி!

மோடியின் இந்த திரித்தல் பேச்சுக்கு பதிலடியாக சரியான விளக்கத்தை ராகுல் காந்தி தந்த பின்னும் இதனை விடாப்பிடியாக தொடர்ந்து கொண்டிருக்கிறார் மோடி! பெரிய பதவியில் உள்ளவர், இப்படி சின்னப் புத்தியோடு பேசலாமா என்று எழும் கேள்விகள் அவர் காதில் விழுவதாகவே தெரியவில்லை! கோயபல்ஸ் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் மோடி!

நீலிக்கண்ணீர் அரசியல் நடிகர் திலகம் சிவாஜியை மிஞ்சிய மோடியின் ‘கப்சா’ : வெளுத்து வாங்கிய சிலந்தி !

சேலத்துப் பிரச்சார மேடையில் மோடி சுற்றுச் சூழல் மறந்து பேசிய பேச்சால் மேடையில் இருந்த பலர் முகம் வெளிறியது! வாரிசு அரசியலை ஒழிப்பதே தனது இலட்சியம் என்று மோடி பேசியபோது, புதிதாக அன்று மோடி பேசும் மேடைக்கு வந்த டாக்டர் ராமதாஸ் - அன்புமணி முகங்கள் தொங்கத் தொடங்கின. மூப்பனார் மகன் வாசன் வாடி வதங்கிப் போனார். இதை எல்லாம் விடப் பெரிய போடு ஒன்றை போட்டு, மேடையில் அங்குமிங்கும் ஓடிமைக்கை கிடைக்கும் நேரத்திலெல்லாம் பிடித்து, மோடியின் கண்ணில் பட வேண்டும் என்று கூவிக் கொண்டிருந்தார். பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவராகப் பதவி வகிப்பவர் 'கொடுத்த பதவிக்கு நல்லா கூவு- றான்டா" - என அந்தக் கட்சியின் பழைய முகங்கள் எல்லாம் கேலி பேசுமளவு கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார் அவர்!

ஜெயலலிதாவை இழிவுபடுத்தியவர்கள் தி.மு.க.வினர் என்று ஜெயலலிதா மீது புதிய பாசம் கொண்டு மோடி பேசியதைக் கேட்டதும் பாவம் அந்த மனிதர் தலை அப்படியே தடாலென்று தொங்கிப் போனது எம்.ஜி.ஆர். மறைந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் சென்று, எம்.ஜி.ஆர். உடல் வைக்கப்பட்டிருந்த வண்டியில் ஏறி அமர்ந்திருந்த ஜெயலலிதாவை அந்த வண்டியிலிருந்து கீழே தள்ளி அசிங்கப்படுத்திய ஒருவர்தான் தன் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையின் துணைத் தலைவர் என்பதெல்லாம் தெரியாது பேசி சொந்தக் கட்சிக்காரருக்கே குன்யம் வைத்தார்; அத்தோடு விட்டாரா? பெருந்தலைவர் காமராசர் மீது புதிய கரிசனம் வந்து புகழ்ந்தார். காமராசர் டெல்லியில் இருந்த வீட்டுக்கு தீ வைத்து அவரை கொலை செய்ய முயன்றது ஆர்.எஸ்.எஸ். கூட்டம் என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணிப் பேசினார், மோடி!

banner

Related Stories

Related Stories