தி.மு.க

தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்.. முதற்கட்ட நிவாரணங்களை இலங்கைக்கு அனுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்.. முதற்கட்ட நிவாரணங்களை இலங்கைக்கு அனுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் சார்பில் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் கப்பலை சென்னை, துறைமுகத்தில் (TANBINH-99) தமிழக முதலமைச்சர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும்,

மருந்து, பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் வழங்கியும் தமிழ்நாடு அரசு உதவும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

குறிப்பாக, ரூ 80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள் ரூ. 15 கோடி மதிப்பில் குழநதைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை முதற்கட்டமாக இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்.. முதற்கட்ட நிவாரணங்களை இலங்கைக்கு அனுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதற்காக, இலங்கைக்கு பொருட்கள் அனுப்ப 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சார்பில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் கப்பலை சென்னை, துறைமுகத்தில் இருந்து (TANBINH-99) தமிழக முதலமைச்சர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

banner

Related Stories

Related Stories