தி.மு.க

திமுகவில் இணைந்த திருவண்ணாமலை அதிமுக, பாமக கவுன்சிலர்கள் & ஊராட்சி மன்றத் தலைவர்கள்; வரவேற்ற முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த அதிமுக, பாமக கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

திமுகவில் இணைந்த திருவண்ணாமலை அதிமுக, பாமக கவுன்சிலர்கள் & ஊராட்சி மன்றத் தலைவர்கள்; வரவேற்ற முதலமைச்சர்!
cm office
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'தி.மு.கழகத் தலைவர் முன்னிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வெம்பாக்கம் ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 8 அ.தி.மு.க. - 7 பா.ம.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்'

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று முன்தினம் (2.1.2022) மாலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வெம்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவரும் - வெம்பாக்கம் ஒன்றிய துணைச் செயலாளருமான மாமண்டூர் டி.ராஜீ தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வெம்பாக்கம் ஒன்றியக்குழு கவுன்சிலர்களான ஒன்றிய மீனவர் அணி செயலாளர் நாட்டேரி சம்பத்து - ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் ராந்தம் குணா - வடஇலுப்பை கவிதா மற்றும் 8 ஊராட்சி மன்றத் தலைவர்களான வயலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் நித்யா, பாவூர் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா, ஓதிருப்பணங்காடு ஊராட்சி மன்ற தலைவரும் - கிளைச் செயலாளருமான து.அரிகிருஷ்ணன், வெம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செ.அருள்தேவி, வெங்களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் நே.சரஸ்வதி, இருமரம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், தென்னம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சாட்சரம், அரசங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ச.உமா - செய்யார் தொகுதி செயலாளரும் - ஒன்றிய முன்னாள் செயலாளருமான ஏ.எஸ்.கார்த்திகேயன், வெம்பாக்கம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் எம்.பி.ராஜமாணிக்கம், வெம்பாக்கம் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் வி.ராமு, வெம்பாக்கம் ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் வி.சந்திரன் மற்றும் பா.ம.க.வைச் சேர்ந்த 7 ஊராட்சி மன்றத் தலைவர்களான சட்டுவந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவரும் - திருவள்ளூர் மத்திய மாவட்ட துணைத் தலைவருமான ஸ்ரீதர், மூஞ்சூர்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பா.கிருஷ்ணமூர்த்தி, வெம்பாக்கம் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் த.லட்சுமி, சோழவரம் ஊராட்சி மன்றத் தலைவர் ம.சசிகலா, அனக்காவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த, ஆலத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அ.மு.ஏழுமலை, மாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமிபாபு (எ) தமிழரசி, அத்தி ஊராட்சி மன்றத் தலைவர் கே.வினாயகம், ஒன்றிய முன்னாள் செயலாளர் மு.பாபு, ஒன்றிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த எம்.தனசேகரன்,தொழிலதிபர்கள் என்.சுப்பிரமணி, சி.கே.காசி, எஸ்.பத்ராச்சலம், ஜி.சரவணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த திருவண்ணாமலை அதிமுக, பாமக கவுன்சிலர்கள் & ஊராட்சி மன்றத் தலைவர்கள்; வரவேற்ற முதலமைச்சர்!
cm office

அப்போது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., அமைச்சரும் - திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான எ.வ.வேலு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் க.பொன்முடி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஓ.ஜோதி, எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், அனக்காவூர் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.வி.சுப்பிரமணியம், ஏஜி.திராவிட முருகன், அன்னை சீனுவாசன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எதிரொலி மணியன், கே.வி.வெங்கடராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories