தி.மு.க

"பேரறிஞரின் 113வது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

"பேரறிஞரின் 113வது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், வள்ளுவர் கோட்ட முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து, அண்ணா அறிவாலய வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது சிலைகளுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படங்களுக்கும் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது மரியாதையை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories