தி.மு.க

மீண்டும் அண்ணா சாலையில் எழுகிறார் தமிழினத் தலைவர் : 1981ல் சினிமா காட்சியில் இடம்பெற்ற கலைஞர் சிலை!

அண்ணா சாலையில் அமைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் சிலை, ராமநாராயணன் இயக்கிய ‘பட்டம் பறக்கட்டும்’ என்ற திரைப்படத்தின் பாடல் காட்சியில் இடம்பெற்றது.

மீண்டும் அண்ணா சாலையில் எழுகிறார் தமிழினத் தலைவர் : 1981ல் சினிமா காட்சியில் இடம்பெற்ற கலைஞர் சிலை!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியால் கவரப்பட்ட தந்தை பெரியார் 1968ஆம் ஆண்டு நிகழ்ச்சியொன்றில் பேசும்போது, “தம்பிக்குச் சிலை ஒன்றை அமைக்க வேண்டும்" என்றார். அப்போதே கலைஞர் இடைமறித்து, “முதலில் உங்களுக்குச் சிலை அமைப்பதைப் பற்றி யோசிக்கிறேன். அதன்பிறகு இதைப் பார்க்கலாம்" என்றார்.

அதன்படி சென்னை சிம்சன் அருகே தந்தை பெரியாருக்குச் சிலை அமைத்தார் கலைஞர். அதன்பிறகு கலைஞருக்குச் சிலை அமைக்கும் பணியை திராவிடர் கழகம் மேற்கொண்டது. அதை அறிந்த கலைஞர், ``தனக்கு திராவிடர் கழகம் சிலை வைப்பதில் விருப்பம் இல்லை" எனக் கருத்து தெரிவித்திருந்தார். ஆனாலும், திராவிடர் கழகம் அண்ணா சாலையில் தர்கா அருகே கலைஞர் சிலையை நிறுவியது. மணியம்மையார் இந்த விழாவுக்குத் தலைமை தாங்கினார். குன்றக்குடி அடிகளார் கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.

1987 டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர் மரணமடைந்தபோது, சிலர், அண்ணாசாலையில் இருந்த கலைஞரின் சிலையை கடப்பாரையைக் கொண்டு சேதப்படுத்தினர். அந்தப் புகைப்படம் அதற்கு பத்திரிகைகளில் வெளியானது.

மீண்டும் அண்ணா சாலையில் எழுகிறார் தமிழினத் தலைவர் : 1981ல் சினிமா காட்சியில் இடம்பெற்ற கலைஞர் சிலை!

இது தி.மு.க தொண்டர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கிய நிலையில் கலைஞர் முரசொலி நாளேட்டில்,

“உடன்பிறப்பே,

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்தச் சின்னத் தம்பி

என் முதுகில் குத்தவில்லை,

நெஞ்சிலேதான் குத்துகிறான்

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!!"

என்று எழுதினார்.

கலைஞருக்கு மீண்டும் சிலை வைக்க திராவிடர் கழகம் முயற்சித்தபோது கலைஞர் விடாப்பிடியாக மறுத்துவிட்டார். அவரது ஆட்சிக்காலத்தில், அவருடைய சிலை இருந்த அந்த பீடத்தையும் நீக்கச் சொல்லி உத்தரவிட்டார்.

இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அண்ணா சாலையில் மீண்டும் கலைஞர் சிலையை அமைக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா சாலையில் மீண்டும் கலைஞர் சிலை நிறுவப்படும் என அறிவித்திருக்கிறார்.

அண்ணா சாலையில் அமைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் சிலை, ராமநாராயணன் இயக்கிய ‘பட்டம் பறக்கட்டும்’ என்ற திரைப்படத்தின் பாடல் காட்சியில் இடம்பெற்றது.

இப்படத்தின், “எல்லோரும் மன்னர்களே... ஏழைகள் நாட்டினிலே’’ என்று தொடங்கும் பாடலில் மாணவர்கள் போராட்டத்தின்போது காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளைக் கடந்து நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அண்ணா சாலையில் மீண்டும் கலைஞர் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories