தி.மு.க

மொழி, இனம், நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட அண்ணாவின் ஆட்சியை 3 மாதங்களில் அமைப்போம்! - மு.க.ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

மொழி, இனம், நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட அண்ணாவின் ஆட்சியை 3 மாதங்களில் அமைப்போம்! - மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 52-வது நினைவுநாளையொட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தப்பட்டது.

காஞ்சி தந்த காவியத் தலைவர், அறிவுலக மேதை , உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு, அண்ணா நினைவிடம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஆ.ராசா, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தி.மு.க மாவட்டச்செயலாளர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் அமைச்சர்கள், மற்றும் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அண்ணா நினைவிடத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தி.மு.க முன்னணியினரும் மரியாதை செலுத்தினார்கள். இதன் பின்னர், மெரினாவில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

banner

Related Stories

Related Stories