தி.மு.க

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய தி.மு.க எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன்!

‘கருப்பன் குசும்பன்’ என்ற வசனத்தால் பெரிதும் பிரபலமான நடிகர் தவசிக்கு இலவசமாக புற்றுநோய் சிகிச்சை அளிப்பதாக தி.மு.க எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் உறுதியளித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய தி.மு.க எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாரதிராஜாவின் ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் இருந்து ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் வரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் தவசி.

இவர், நடிகர் சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அவரது ‘கருப்பன் குசும்பன்’ என்ற வசனம் நெட்டிசன்கள் மத்தியிலும், மீம்ஸ் மூலமும் மிகவும் பிரபலமானது.

இந்த நிலையில், நடிகர் தவசிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிகிச்சைக்கு போதுமான பணமில்லாமல் தனது உறவினர் மூலம் நிதி உதவி கேட்ட அவரது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இப்படி இருக்கையில், திருப்பரங்குன்றம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான சரவணன் தனது மருத்துவமனையில் அனுமதித்து இலவசமாக சிகிச்சை அளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நலிந்த திரைப்பட நடிகர்கள் தொழிலாளர்களுக்கு உதவுவதாக கூறிய நடிகர் சங்கங்களே உதவ முன்வராத நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் நடிகர் தவசியின் அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்று சிகிச்சை அளிக்க முன்வந்த நிகழ்வு பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories